மாவட்ட செய்திகள்
ஒட்டன்சத்திரம்- நியாயவிலைக் கடைக்குள் புகுந்த யானையால் பொதுமக்கள் அச்சம்.

ஒட்டன்சத்திரம்- நியாயவிலைக் கடைக்குள் புகுந்த யானையால் பொதுமக்கள் அச்சம்- யானையை அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் கொண்டு விடுமாறு வனச்சரக அலு
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பரப்பலாறு அணை பகுதி அமைந்துள்ளது .இந்த அணைப் பகுதிக்கு அருகே உள்ள பெத்தலாபுரம் என்னும் கிராமத்தில் நேற்றிரவு ஊருக்குள் புகுந்த காட்டு யானை குடியிருப்பு பகுதியில் சுற்றித் திரிந்தும் உள்ளது. மேலும் இத்தளத்தில் அமைந்துள்ள நியாயவிலைக் கடையை உடைத்து உள்ளே இருந்த சர்க்கரை, கோதுமை அரிசி ,பருப்பு உள்ளிட்ட பொருட்களை சாப்பிட்டும் சென்றுள்ளது.

எனவே தொடர்ந்து கடந்த ஒரு வார காலமாக இந்த ஒற்றை காட்டு யானை ஊருக்குள் புகுந்து அச்சத்தை ஏற்படுத்தி வருவதாகவும் பொதுமக்கள் கூறுகின்றனர். மேலும் வனத்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுத்து அடர்ந்த காட்டுப் பகுதிக்குள்காட்டு யானையை விரட்டி கொண்டு விட வேண்டும் என்று மலை கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
