மாவட்ட செய்திகள்
காரைக்காலில் 16.50 ஆயிரம் மதிப்பீட்டில் ஈமகிரியை மண்டபத்தை நாஜிம் திறந்து வைத்தார்.

காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு ரோட்டில் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் ஈமக்கிரியை மண்டபம் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.16 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்காக காரைக்கால் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம்.ஹெச்.நாஜீம் திறந்து வைத்தார்.
சட்டமன்ற உறுப்பினர் கூறுகையில் காரைக்கால் நகர பகுதியில் வசிக்கக்கூடிய பொது மக்கள் கருமாதி காரியம் செய்யவேண்டும் என சொன்னால் கோவில்பத்திற்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் வந்த நிலையில் அதை ஏற்று சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ. 16,50.000 ஒதுக்கி புதுப்பொலிவுடன் ஈமகிரியை மண்டபத்தை புதுப்பித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது எனக் கூறினார்.

இதில் காரைக்கால் நகராட்சி ஆணையர் செந்தில்நாதன், செயற்பொறியாளர் லோகநாதன், இளநிலை பொறியாளர் சத்தியபாலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
