BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

திறப்பு விழாவுக்கு காத்திருக்கும் உடுமலை உடுமலை அரசினர் தொழிற்பயிற்சி நிலையம்.

உடுமலை எலையமுத்தூர் சாலையில் உடுமலை அரசு கலைக்கல்லூரி எதிர்புறம் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய கட்டுமான பணிகள் நிறைவுற்று ள்ளதை தொடர்ந்து திறப்பு விழாவிற்காக தொழிற்பயிற்சி நிலையம் காத்திருக்கிறது.
உடுமலையில் தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் சார்பில் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் இயங்கி வருகிறது தற்போது உடுமலை கொழுமம் கண்ணமநாயக்கனுர் பிரிவில் உள்ள தனியாருக்கு சொந்தமான கட்டிடத்தில் வாடகை கட்டிடத்தில் இயங்கி வரும் இந்த தொழில் பயிற்சி மையத்தில் பிட்டர் .எலக்ட்ரீசியன் ஒயர்மேன். மோட்டார் மெக்கானிக் வெல்டர் ஆகிய பாடப்பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன.
இதில் வெல்டர் பாடபிரிவாகவும் ஒரு வருட படிப்பகவும் மற்ற பாடங்கள் 2 வருட படிப்பாகும் இதில் ஒவ்வொரு ஆண்டுக்கும் மொத்தம் 124 மாணவ-மாணவிகள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் அதன்படி இந்த தொழிற்பயிற்சி நிலையத்தில் ஒவ்வொரு ஆண்டும் முதலாண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவ மாணவிகளின் மொத்த எண்ணிக்கை 248ஆக இருக்கும்
வாடகை கட்டிடத்தில் இயங்கி வரும் இந்த அரசினர் தொழில் பயிற்சி நிலையத்திற்கு உடுமலை எலையமுத்தூர் சாலையில் உள்ள அரசு கலைக் கல்லூரிக்கு எதிரே தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை க்கான இடத்தில் ரூபாய் 5 கோடியே 56 லட்சத்து சொந்த கட்டிடம் கட்டப்பட்டுள்ளது கட்டிடப் பகுதியில் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் இந்தக் கட்டிடத்திற்கு வர்ணம் பூசப்பட்டுள்ளது இனி இந்த வளாகத்தை சுற்றி சுற்றுச்சுவர் மட்டும் கட்டப் பட வேண்டியுள்ளது.


மொத்தம் சுமார் 3 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த இடத்தில் இந்த தொழில் பயிற்சி நிலையத்தில் தரைத்தளம் 14 81 .93 சதுர மீட்டர் பரப்பளவி லும் முதல் தளம் 525.35 சதுர மீட்டர் பரப்பளவில் உம் என மொத்தம் 2007.28 சதுர மீட்டர் அளவிற்கு கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
இதில் அனைத்து பாடப்பிரிவுகளும் வகுப்பறைகள் இந்த வகுப்புகளுக்கான தனித்தனி தொழில் பயிற்சி கூடங்கள் மற்றும் அனைத்து பாடப் பிரிவு மாணவ மாணவியருக்கான ஸ்மார்ட் கிளாஸ் வரை கணினி பரிசோதனை கூடம் ஆகியவை இடம்பெறும்.
அத்துடன் இந்த தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் மாணவர்களுக்கு மட்டுமான தங்கும் விடுதியும் கட்டப்பட்டுள்ளது தரைத்தளம் முதல் முதல் தளம் ஒவ்வொன்றும் 250 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த விடுதியில் மொத்தம் 70 மாணவர்கள் தங்கலாம்.
தொழிற்பயிற்சி நிலைய கட்டிடத்தின் பெரும்பாலான பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் திறப்பு விழாவிற்காக காத்திருக்கும் என்ற தொழில் பயிற்சி நிலையம் வருகிற கல்வி ஆண்டு முதல் செயல்படும் என்று நிர்வாகம் தரப்பில் கூறப்படுகிறது.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )