மாவட்ட செய்திகள்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 15-ஆவது வார்டு தேர்தல் அலுவலகம் திறப்பு விழா!!! தஞ்சாவூர் மாநகராட்சி 15வது வார்டில் போட்டியிடும் திமுக கூட்டணியின் சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்.
கே.கல்யாணிகதிர் அரிவாள் சின்னத்தில் போட்டியிடுகிறார்.தேர்தல் பணிக்காக கீழராஜவீதி15 வது வார்டு பகுதியில் தேர்தல் அலுவலகம் இன்று மாலை5 மணிக்கு திறக்கப்பட்டது. தேர்தல் அலுவலகத்தினை முன்னாள் வரிகவணித்துறை அமைச்சர் எஸ்.என்.எம். உபயதுல்லா திறந்து வைத்து தமிழ்நாட்டில் தளபதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று கொண்டிருக்கும் நல்ல ஆட்சி நடைபெறும் உள்ளாட்சித் தேர்தலிலும் தொடர்ந்திடவும், இப் பகுதி அனைத்து அடிப்படை வசதிகளும் நிறைவுற்ற வார்டாக அமைந்திடவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் கே.கல்யாணியை திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிதோழர்கள் அனைவரும் சேர்ந்து வெற்றி பெறச்செய்ய வேண்டும் என்று உரையாற்றினார்.
நிகழ்வில் திமுக முன்னாள் மாநகர துணை செயலாளர் பி.மோகன் ,மாவட்ட பிரதிநிதி பி.கண்ணன், கிளைக் கழக செயலாளர் எஸ்.ஸ்ரீதர், அவைத்தலைவர் வெள்ளைச்சாமி, 15 வதுவார்டு திமுக நிர்வாகிகள் ராஜமாணிக்கம், அகர.மணிகண்டன், பாலாஜி ,முத்து,சையதுஅபுதாகீர்,சக்தி,சுரேஸ்குமார், திமுக இளைஞரணி கணபதிமுத்துக் குமரன் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் சி.சந்திரகுமார், ஆர். பி முத்துக்குமரன், வெ.சேவையா, ஜி.கிருஷ்ணன், ஏஐடியூசி தொழிற்சங்க நிர்வாகிகள் ஆர்.தில்லைவனம், க.அன்பழகன், துரை. மதிவாணன், பி.செல்வம், மருத்துவர் சுதந்திர பாரதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
துரை.மதிவாணன்.