மாவட்ட செய்திகள்
வேலூர் மாவட்டம் காட்பாடியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டி.
வேலூர் மாவட்டம் காட்பாடியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளில் அம் மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமான மாற்றுத்திறனாளி மாணவர்கள் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டு விளையாடினர்.
வேலூர் மாவட்டம், காட்பாடியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆணையர் ஜான் டாம் வர்கீஸ் தலைமையிலும், வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் முன்னிலையிலும் நடைபெற்ற போட்டிகளில் மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமான மாற்றுத்திறனாளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இங்கு நடைபெற்ற ஓட்டப்பந்தயம், கபடி, வீல் நாற்காலி, பால் பேட் மிட்டன் ஆகிய போட்டிகளில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் மகிழ்ச்சியுடன் பங்கேற்றனர். இந்த விளையாட்டுக்கள் தங்களை மற்றவர்களைப் போல இயல்பாக உணர வைப்பதாக மாணவர்கள் தெரிவித்தனர். போட்டிகளில் கலந்து கொண்ட மற்றும் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் அளிக்கப்பட்டன.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.