BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

திருச்சி கல்லூரியில் ஜோஸ்டெல் மதிப்புக்கூட்டு இணைய வழி மேலாண்மை பாடம் திட்டங்கள் துவக்கம்.

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் மதிப்பீட்டு குழு முயற்சியில் தமிழகத்தில் உள்ள கலை அறிவியல் கல்லூரிகளில் முதன்முறையாக முதுகலை மாணவர்களுக்கான இணையவழியில் தாங்களாகவே கற்பதற்கு ஏதுவாக ஜோஸ் டெல் என்கிற கற்றல் மேலாண்மை தளத்தை கல்லூரியின் உள்ள பேராசிரியர்கள் முனைவர் ஜீடு நிர்மல், முனைவர் சேவியர்பிரதீப்சிங், முனைவர் ஜெரால்ட் மற்றும் முனைவர் கேப்ரியல்ரிச்சர்ட் ராய் ஆகியோர் தளத்தை உருவாக்கி உள்ளனர். இந்த தளத்தை மாணவர்கள் பயன்பெறும் வகையில் கல்லூரி முதல்வர் அருட்தந்தை முனைவர் ஆரோக்கியசாமி சேவியர் இன்று செயல்பாட்டுக்கு கொண்டு வந்தார்.


இந்நிகழ்வில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக மனிதவள மேம்பாட்டு பயிற்சி மையத்தின் இயக்குனர் முனைவர் செந்தில்நாதன் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.

முன்னதாக செய்திகளுக்கு பேட்டி அளித்த கல்லூரி முதல்வர் அருள்தந்தை ஆரோக்கியசாமி சேவியர் கல்லூரியின் பேராசிரியர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களின் முயற்சியால் இந்த ஜோஸ்டெல் என்கிற கற்றல் மேலாண்மை தளம் உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு துறையில் மாணவர்களும் வேலைவாய்ப்பு திறனை வளர்ப்பதற்கு உதவும் வகையில் பாடத் திட்டங்களை தேர்வு செய்து அந்தப் பாடத்தில் நிபுணத்துவம் பெற்ற பேராசிரியர்கள் பாடங்களுக்கான காணொளிகள் மற்றும் தகவல்கள் உருவாக்கி இந்த கற்றல் மேலாண்மை தளத்தில் உள்ளீடு செய்து உள்ளனர்.

மாணவர்கள் கற்றலை உறுதி செய்யும் வகையில் ஒவ்வொரு பாடத்திற்கும் இணைய வழி நடத்தப்படும். இந்தக் கற்றல் மேலாண்மை தளத்தில் முதல் கட்டமாக கல்லூரியின் அனைத்து முதுகலை மாணவர்கள் இணைந்து கற்கும் விதத்தில் மொத்தம் 20 சுய கற்றல் பாடங்களும் மற்றும் மதிப்பு கூட்டு பாடங்களும் தயாரிக்கப்பட்டு தரவேற்றம் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

மேலும் கல்வித்துறையில் உலகளாவிய பல தொழில்நுட்ப மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது. மாணவர்களும் உலக தரத்திற்கு படங்களை தங்குதடையின்றி விரும்பும் நேரத்தில் இருக்கும் இடத்தில் இருந்து கற்றலை தொடர இந்த மேலாண்மை தளம் உதவுகிறது என தெரிவித்தார்.

இந்நிகழ்வுகளில் கல்லூரி அதிபர் முனிவர் அருட்தந்தை லியோனார்ட் பெர்னாட்ஷா, செயலாளர் முனைவர் அருட்தந்தை பீட்டர்,
அக தர மதிப்பீட்டு குழு தலைவர் முனைவர் ரோஸ் வெனிஸ் இடைத் தலைவர் குர்ஷித் பேகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )