BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

எந்த மத வழிபாட்டு தலமாக இருந்தாலும் அரசு பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளித்து நம்பகத்தன்மை ஏற்படுத்துவது அரசினுடைய கடமை என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜிகே வாசன் கூறினார்.

தஞ்சாவூர் மாவட்டம் களிமேடு கிராமத்தில் நடைபெற்ற மின் விபத்தில் உயிரிழந்த 11 நபர்களின் குடும்பங்களுக்கு நேரடியாக சென்று ஆறுதல் தெரிவித்து தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் விபத்தினால் பாதிக்கப்பட்டவர்களையும் ஜி கே வாசன் சந்தித்து பேசி ஆறுதல் தெரிவித்தார்.


அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் எந்த மத வழிபாட்டு தலமாக இருந்தாலும் அரசு பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளித்து பொதுமக்களுக்கு நம்பகத்தன்மை ஏற்படுத்துவது அரசினுடைய கடமை என்றும், அரசை யாரும் குற்றம் சாட்டவில்லை என்று கூறினாலும் பொதுமக்களின் நலன் கருதி அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்.


இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் விபத்து நடைபெற்ற கோவில் வரவில்லை என்றாலும் மக்களின் நலன் கருதி அரசு எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்துகள் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறிய அவர் உயர்மின் அழுத்தக் கம்பி தாழ்வாக சென்றதால் தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக சிலர் தெரிவித்திருப்பதாகவும் எதிர்காலத்தில் இது போன்ற சம்பவம் நடைபெறாமல் இருக்க மின்சாரத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், கடந்த ஆண்டு தஞ்சாவூர் மாவட்டம் வரகூரில் மின்சார கம்பி மீது பேருந்து ஒரு ஏற்பட்ட மின் விபத்தில் நான்கு நபர்கள் உயிரிழந்தனர் எனவே எதிர்காலத்தில் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அரசு செயல்பட வேண்டும் என்று ஜி கே வாசன் தெரிவித்தார்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )