மாவட்ட செய்திகள்
ஜூவல்ஒன், சேலம் புதிய பேருந்து நிலையத்திற்கு எதிரில், பிரம்மாண்டமான புதிய ஷோரூமினைத் திறந்தது !

ஜூவல்ஒன், சேலம் புதிய பேருந்து நிலையத்திற்கு எதிரில், பிரம்மாண்டமான புதிய ஷோரூமினைத் திறந்தது !
# தொடக்க விழாச் சலுகையாக இலவச வெள்ளி அக்ஷய விளக்கு உட்பட ஏராளமான சலுகைகளை, வாடிக்கையாளர்களுக்கு வாரி வழங்குகிறது !

‘பெண் மனதைப் புரிந்த பொன்’ என்ற தாரக மந்திரத்துடன் திகழ்ந்து வரும் பெண்களின் மனம் கவர்ந்த தங்க நகை ஆபரண பிராண்டும், தமிழகத்தைச் சேர்ந்த எமரால்ட் குழுமத்தின் ஒரு அங்கமுமாகிய ஜூவல்ஒன், (JewelOne), சேலம், புதிய பேருந்து நிலையத்திற்கு எதிரில், இன்று (29 ஏப்ரல் 2022) மிகப் பிரம்மாண்டமான ஷோரூமைத் திறந்துள்ளது. ஓமலூர் மெயின் ரோட்டில் அமைந்துள்ள இந்த ஷோரூம் 2,534 சதுர அடி பரப்பளவு கொண்டது. ஒட்டுமொத்த ஆபரணங்களையும் கண்டு, ரசித்து, வாங்கி மகிழும் வகையில் ஒரே தளத்தில் அமைந்துள்ள இந்த ஷோரூம், 34 அடி முன்புற அகலத்துடன் அழகுற வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே சேலத்தில் சிறிய இடத்தில் இயங்கி வந்த இந்த ஷோரூம், தற்போது பிரம்மாண்டமாக புதிய இடத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய ஷோரூமை எமரால்ட் ஜூவல் இண்டஸ்ட்ரி இந்தியா லிமிடெட் (EMERALD JEWEL INDUSTRY INDIA LIMITED) நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் மேலாண் இயக்குனர் திரு. K. சீனிவாசன், துணை மேலாண் இயக்குனர் திருமதி சக்தி சீனிவாசன், இயக்குனர் செல்வி நிஷ்டா சீனிவாசன் மற்றும், முக்கிய சிறப்பு விருந்தினர்கள், தலைமை செயல் அதிகாரி திரு. N. வைத்தீஸ்வரன் உள்ளிட்டோர் முன்னிலையில் திறந்து வைத்தனர். பாரம்பரிய முறையில் குத்து விளக்கு ஏற்றப்பட்டு இந்தத் திறப்பு விழா வைபவம் நடைபெற்றது.

இப்புதிய ஷோரூம் திறப்பு விழா குறித்து எமரால்ட் ஜூவல் இண்டஸ்ட்ரி இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் மேலாண் இயக்குனர் திரு. K. சீனிவாசன் கூறுகையில், “வாடிக்கையாளர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை வழங்கவிருப்பதை எண்ணி நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்துள்ளோம். சேலத்தில் தொடங்கி இருக்கக்கூடிய இந்தப் புதிய ஷோரூமானது, ஒரே தளத்தில் 2,534 சதுர அடி பரப்பளவுடன் அமைந்துள்ளது. எங்களுடைய ஷோரூம்களில் இதுவரை 30 அடிக்கும் அதிகமான முன்புற அகலம் கொண்ட முதல் ஷோரூம் இதுதான். இந்த ஷோரூமின் அடித்தளத்தில் வாகன நிறுத்துமிட வசதியும் (Basement Parking Facility) இருப்பது வாடிக்கையாளர்களை நிச்சயம் மகிழ்ச்சி அடையச் செய்யும்” என்றார்.
தொடக்க விழாச் சலுகையாக, ஜூவல்ஒன் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு தங்கம் மற்றும் வைர நகைகளை வாங்கும் போது எண்ணற்ற சலுகைகளை வாரி வழங்கி, அவர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தவுள்ளது. சலுகைகளின் ஒரு பகுதியாக வாடிக்கையாளர்களுக்கு இலவச சில்வர் அக்ஷய விளக்கும் வழங்கப்பட இருக்கிறது.
இந்நிகழ்ச்சியில் பேசிய எமரால்ட் ஜூவல் இண்டஸ்ட்ரி இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி திரு. N. வைத்தீஸ்வரன், “சந்தையில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப எங்கள் பிராண்ட் – ஜூவல்ஒன், தம்மை அவ்வப்போது புதுவிதமாக மாற்றி வடிவமைத்துக் கொண்டு வருகிறது. மக்களின் மனம் கவரும் வகையில், உகந்த விலை வைர நகைக் கலெக்ஷனான ‘சியரா’ (CHIARAA – Affordable Diamond Collection), பூக்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட நகைக் கலெக்ஷனான ‘அயானா’ (AYANAA – Floral Collction), நீர் வீழ்ச்சியை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட வைர நகைக் கலெக்ஷனான ‘நிர்ஜரா’ (NIRJHARA – Theme Based Diamond Collection), துடிப்பான ஜெம் ஸ்டோன் நகைக் கலெக்ஷனான ‘ஜீனா (ZHEENA – Vibrant Gem Stone Collection) ஆகிய நான்கு வகையான கலெக்ஷன்களை கடந்த 12 மாதங்களில் அறிமுகப்படுத்தியுள்ளது” என்றார்.

மிகக் குறைந்த அளவான 4.99 சதவீத வி.ஏ. (VA) வில் தொடங்கி இந்த ஷோரூமில் நகைகள் விற்பனை செய்யப்படவுள்ளன. இங்கு நகைகளை சர்வீஸ் செய்து தரும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் முதல்முறையாக திருமண நகைகளுக்கு என பிரத்தியேக கவுண்டரும் இங்கு உருவாக்கப்பட்டுள்ளது.
ஜூவல்ஒன் பிராண்டிற்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி முழுவதும் 14 கிளைகள் உள்ளன. இந்த பிராண்ட் பிரான்சைஸ் மற்றும் பிசினஸ் பார்ட்னர்கள் மூலமாக மாநிலம் மற்றும் தேசிய அளவில் புதிய கிளைகளைத் திறக்கத் திட்டமிட்டுள்ளது.
வாடிக்கையாளர்கள், 1 / 2, அர்த்தநாரி நகர், புதிய பேருந்து நிலையம் எதிரில், ஓமலூர் மெயின் ரோடு, சேலம் என்ற முகவரியில் அமைந்துள்ள ஜூவல்ஒன் ஷோரூமைப் பார்வையிட்டு மகிழலாம்.
ஊடகத் தொடர்பு : அமர்நாத், துணை மேலாளர் – ரீடெயில் மார்க்கெட்டிங், எமரால்ட் ஜூவல் இண்டஸ்ட்ரி இந்தியா லிமிடெட் @ 96297 44555.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
