மாவட்ட செய்திகள்
கன்னியாகுமரி மாவட்டம் செண்பகராமாபுரத்தில் புதிய அங்கன்வாடி அடிக்கல் நாட்டு விழா.

அஞ்சுகிராமம் பேரூராட்சிக்கு உட்பட்ட செண்பக ராமாபுரத்தில் புதிய அங்கன்வாடி அமைக்க கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் தளவாய்சுந்தரத்திடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று தளவாய் சுந்தரம் எம் எல் ஏ தனது சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 12 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார். அதனைத் தொடர்ந்து புதிய அங்கன்வாடி கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
விழாவிற்கு அதிமுக பேரூர் செயலாளரும், கவுன்சிலருமான ராஜபாண்டியன் தலைமை தாங்கினார். ஒன்றிய விவசாய அணி செயலாளர் மேட்டுக்குடி முருகன், கவுன்சிலர்கள் மீனாஜோதி, சிவகுமார், கிளைச் செயலாளர் பரமசிவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர்களாக அஞ்சுகிராமம் பேரூராட்சி மன்ற தலைவி ஜானகி இளங்கோ, அகஸ்தீஸ்வரம் ஒன்றிய அதிமுக செயலாளர் ஜெஸீம் ஆகியோர் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினர். இந்நிகழ்ச்சியில் முன்னாள் கவுன்சிலர் சுந்தர், விஷ்ணு, விஜயன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
