மாவட்ட செய்திகள்
நாகர்கோவிலில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற 7 டன் ரேஷன் அரிசி லாரியுடன் பறிமுதல் – 2 பேர் கைது.
நாகர்கோவிலிலிருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற 7 டன் ரேஷன் அரிசியை வடசேரி போலீசார் லாரியுடன் பறிமுதல் செய்தனர் இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்திச் செல்லப்பட்டு வருகிறது இதை தடுக்க போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் இந்த நிலையில் நாகர்கோவில் வடசேரி போலீசார் டென்னிசன் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது அந்த வழியாக லாரி ஒன்று சென்றது அதனை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது அதில் அனுமதி இல்லாமல் 7 டன் ரேஷன் அரிசி கேரளாவுக்கு கடத்திச் செல்லப்படுவது தெரியவந்தது இதனைத் தொடர்ந்து அந்த லாரியை வடசேரி போலீசார் பறிமுதல் செய்தனர் லாரியில் இருந்த மது மற்றும் வேலாயுதம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர் வடசேரி போலீசார் பறிமுதல் செய்த லாரியும் குற்றவாளிகளும் நாகர்கோவில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.