மாவட்ட செய்திகள்
பிளாஸ்டிக் கவர்கள் விற்ற 6 கடைகளுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர்.
வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா, சுகாதார அலுவலர் லூர்துசாமி, 2-வது மண்டல குழு தலைவர் நரேந்திரன், உதவி கமிஷனர் வசந்தி ஆகியோர் லாங்கு பஜாரில் பஜாரில் உள்ள கடைகளில் திடீரென சோதனை செய்தனர்.
அப்போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் கடைகளில் விற்பனை செய்யப்படுகிறதா என அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது அங்குள்ள 6 கடைகளில் 10 கிலோ பிளாஸ்டிக் கவர்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அதிகாரிகள் ஒரு கடைக்குத் தலா ரூ.10 ஆயிரம், மற்ற 5 கடைகளுக்கு ரூ.தலா 2 ஆயிரம் என மொத்தம் ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்துள்ளனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.