BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

கோவையில் காரில் பேசிக்கொண்டிருந்த காதல் ஜோடியிடம் பணம் பறித்த இரண்டு போலீஸார் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ரூ.1 லட்சம் தராவிட்டால் 'வில்லங்க' கேஸ் போட்டு விடுவோம்!: காதலர்களை மிரட்டிய கோவை போலீஸார்

கோவை மாவட்டம், சூலூரில் காதல் ஜோடி இருவர் காரில் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது டூவீலரில் வந்த போலீஸார் இருவர், காதல் ஜோடி காரில் இருப்பதைக் கண்டனர். ரூ.1 லட்சம் தராவிட்டால், காரில் விபச்சாரம் செய்வதாக வழக்குப்பதிவு செய்வோம் என்று அவர்களிடம் போலீஸார் மிரட்டியுள்ளனர்.

இதனால் பயந்து போன காதலர்கள், தங்களிடம் இருந்த 10 ஆயிரம் ரூபாயைத் தந்துள்ளனர். அதை வாங்கிக் கொண்ட போலீஸார் அங்கிருந்து சென்று விட்டனர்.

இதுகுறித்து கருமத்தம்பட்டி டிஎஸ்பி அலுவலத்தில் காதல் ஜோடி புகார் செய்தது. சூலூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்த போது, காதல் ஜோடியிடம் பணம் பறித்தது கருமத்தம்பட்டி முதல் நிலை காவலர் ராஜராஜன், ஆயுதப்படை காவலர் ஜெகதீஸ் என்பது தெரிய வந்தது. இவர்கள் இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதல்ஜோடிகளிடம் மிரட்டி பணம் பறித்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீஸார் கைது செய்தனர். காதல் ஜோடியும் மிரட்டி பணம் பறித்த வழக்கில் போலீஸாரே கைது செய்யப்பட்ட சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )