BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து அருகே சூரக்காடு என்ற இடத்தில் காரைக்காலில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்ற அரசு பேருந்து நிலைதடுமாறி வாய்க்காலில் கவிழ்ந்து 31பேர் காயம். 2 பேர் படுகாயம். காரைக்காலில் இருந்து பாண்டிச்சேரி நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தபோது சீர்காழி அருகே சூர காடு என்ற பகுதியில் பேருந்து நிலை தடுமாறி கீழே விழுந்து. உடனடியாக அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் பேருந்தில் இருந்தவர்களை மீட்கப்பட்டு சீர்காழி அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த விபத்தில் 31 பேர் சிறு காயங்களுடன் இரண்டு பேர் படுகாயங்களுடன் தீவிர சிகிச்சைக்காக சிதம்பரம் அண்ணாமலை மருத்துவ கல்லூரிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். இதில் அரசு பேருந்து ஓட்டுநர் அன்பழகன் ,வீரப்பன், ரவிச்சந்திரன், குப்புசாமி, நந்தகுமார், மாரியப்பன், வடிவழகன் ,பிருந்தா, சக்திபால், ராம்குமார், பூஜா, லாவண்யா, ஆகியோர் சிறு காயங்களுடன் தப்பினர். சிதம்பரம் பகுதியை சேர்ந்த வெங்கட்ராமன் காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த கலைப்பொன்னி ஆகியோர் தலையில் பலத்த அடிபட்டு சிதம்பரம் அண்ணாமலை மருத்துவ கல்லூரிக்கு பரிந்துரைக்கப்பட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த விபத்து செய்தியை அறிந்த மாவட்ட ஆட்சியர் ரா.லலிதா உடனடியாக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு வந்து பார்வையிட்டு விபத்து நடந்தது பற்றி பயணிகளிடம் கேட்டறிந்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யவும் சிகிச்சைகளை மேற்கொள்ளவும் மருத்துவர்களிடம் கூறினார்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )