மாவட்ட செய்திகள்
தஞ்சை களிமேடு கிராமத்தில் நடந்த தேர் திருவிழாவில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த குடும்பத்தினர்களுக்கு நிவாரண உதவி மதர் தெரசா பவுண்டேஷன் சேர்மன் சவரிமுத்து வழங்கினார்.

தஞ்சை அருகே உள்ள களிமேடு கிராமத்தில் கடந்த 28-ம் தேதி அதிகாலையில் தேரை இழுத்து வந்து நிலை நிறுத்தும் போது, எதிர்பாராதவிதமாக தேர் மீது உயரழுத்த மின் கம்பி உரசியது. இதனால் தேரில் இருந்தவர்கள் மீதும், அதன் அருகில் நடந்து சென்றவர்கள் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில் 11 பேர்கள் உயிரிழந்தனர். இந்தக் கோர விபத்து சம்பவத்தால் அந்த கிராமத்தில் உள்ள அனைத்து மக்களும் மிகுந்த சோகத்தில் இருந்து வருகின்றன. உயிரிழந்த குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்களை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிவாரணம் வழங்கினார். மேலும் பல்வேறு அரசியல் தலைவர்கள் களிமேடு கிராமத்திற்கு சென்று ஆறுதல் கூறி நிவாரணப் பொருட்கள் வழங்கி உதவி செய்து வருகின்றனர். அந்த வகையில் தஞ்சை மாதாகோட்டை சாலை அருகில் செயல்பட்டு வரும் மதர் தெரசா பவுண்டேஷன் சார்பில் அதன் சேர்மன் சவரிமுத்து மற்றும் பாஸ்டர் பாஸ்கர், அறங்காவலர் சம்பத், ராகவன் ஆகியோர்கள் களிமேடு கிராமத்திற்கு நேற்று சென்றனர். பின்னர் உயிரிழந்த 11 பேர்களின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று நிவாரண பொருட்களை வழங்கி ஆறுதல் கூறினர். அப்போது, சேர்மன் சவரிமுத்து கூறும்போது:
தமிழக முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் இந்த கிராமத்திற்கு வருகை தந்து ஒவ்வொரு வீடுகளுக்கும் நடந்தே சென்று, அவர் அறிவித்தபடி நிவாரண வழங்கி ஆறுதல் கூறியது இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அதற்காக முதல்வருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நாங்களும் தற்போது எங்களுடைய மதர் தெரசா பவுண்டேஷன் சார்பில் நிவாரணம் வழங்கியுள்ளோம். பாதிக்கப்பட்ட குடும்பத்தில் யாராவது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை தொடர முடியாமல் இருந்தால் அவர்களை எங்களது பவுண்டேஷன் சார்பில் தத்தெடுத்து கல்வி பயில்வதற்கான கட்டணத்தை ஏற்க உள்ளது என்றார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
