BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

அரசுப் பள்ளி மாணவர்களுக்கிடைய சாதி ரீதியாக ஏற்பட்ட மோதலில் 12-ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Murder under Indian Penal Code: All you need to know about it

அரசுப் பள்ளி மாணவர்களுக்கிடைய சாதி ரீதியாக ஏற்பட்ட மோதலில் 12-ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக மூன்று மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம், முக்கூடல் அருகே உள்ள பாப்பாக்குடி பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த விவசாயி முருகன். இவரது மனைவி உச்சிமாகாளி. இவர்களது மகன் செல்வசூர்யா அம்பை அருகே பள்ளக்கால் புதுக்குடியில் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்- 2 படித்து வந்தார். இந்த பள்ளியில் படிக்கும் 12-ம் வகுப்பு மாணவர்கள் தங்கள் சமூகத்தை வெளிப்படுத்தும் கையில் சாதிக்கயிறு கட்டி வந்துள்ளனர். இதனால் மறு தரப்பு மாணவர்களுக்கும், அவர்களுக்கும் விரோதம் ஏற்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக ஏப்ரல் 25-ம் தேதி மீண்டும் இருதரப்பு மாணவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது.

அப்போது கல்லைக் கொண்டு மாணவர்கள் தாக்கியதில் செல்வசூர்யா படுகாயமடைந்தார். இதனைத் தொடர்ந்து சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி செல்வசூர்யா உயிரிழந்தார். இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு 3 மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் நெல்லை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )