மாவட்ட செய்திகள்
திண்டுக்கல்- மாவட்டத்தை சுற்றியுள்ள தென்னை விவசாயிகளுக்கு தென்னை சாகுபடி பற்றிய கருத்தரங்கு கூட்டம்.

திண்டுக்கல் தனியார் திருமண மண்டபத்தில் நேற்று மத்திய அரசின் வேளாண் மற்றும் உழவர் நல அமைச்சகம் தென்னை வளர்ச்சி வாரியம் சார்பில் மாவட்ட அளவிலான கருத்தரங்கு வாரிய உறுப்பினர் முத்துராமலிங்கம் தலைமையில் கருத்தரங்கு கூட்டம் நடைபெற்றது.. இதில் தரமான தென்னங்கன்றுகளை உற்பத்தி செய்து விநியோகம்செய்தல்,தென்னை சாகுபடி பரப்பினை விரிவுபடுத்துதல், உற்பத்தி திறனை மேம்படுத்த ஒருங்கிணைந்த உற்பத்தித் திறனை செயல்படுத்துதல், மேம்பாடு மற்றும் தென்னை சாகுபடி பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மற்றும் நிகழ்வுகள் நடைபெற்றது .இதில் தென்னை தொழில்நுட்பங்கள் பற்றிய தகவல் மற்றும் தகவல் தொழில்நுட்ப நடவடிக்கைகள், உழவர் உற்பத்தியாளர் அமைப்பு, துறையின் புதிய பயிர் காப்பீடு உள்ளிட்ட திட்டங்கள் குறித்து கருத்தரங்கில் பேசப்பட்டது. மேலும் தென்னை விவசாயிகள் மற்றும் தென்னை மரங்கள் ஏறுபவர்கள் தென்னை பயிர் ஆகியவற்றிற்கான காப்பீடு திட்டங்கள், மானியத் திட்டங்கள், தென்னையின் புதிய ராகங்கள் பற்றி விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்த கருத்தரங்கில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக பேராசிரியர் ராஜமாணிக்கம் மேலாளர் ரஹ்மன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள். உடன் இந்த கருத்தரங்கு கூட்டத்திற்கு திண்டுக்கல், சிறுமலை, சாணார்பட்டி, வேடசந்தூர், ஒட்டன்சத்திரம், பழனி ,நிலக்கோட்டை ,ஆத்தூர் உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
