BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

கோவில்பட்டி மார்கெட் பகுதிகளில் காவல் உதவி ஆய்வாளர் என்று கூறி பண வசூல் வேட்டையில் ஈடுபட்ட ஆசாமி கைது.

கோவில்பட்டி மார்கெட் பகுதிகளில் உள்ள கடைகளில் காவல் உதவி ஆய்வாளர் என்று கூறி பண வசூல் வேட்டையில் ஈடுபட்ட ஆசாமி கைது. கிழக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மார்க்கெட் பகுதியில் அமைந்துள்ள அரிசி கடை மற்றும் துணிக்கடைகளுக்கு சென்று தான் சிஜடி காவல் உதவி ஆய்வாளர் என்றும் தனது கார் பழுதாகி நின்று விட்டதாகவும் கூறி மார்க்கெட் பகுதியில் உள்ள எஸ் என் அரிசி கடையில் 3000 ரூபாய் பெற்றுள்ளார் .மேலும் கிருஷ்ணன் கோவில் அருகே உள்ள துணிக்கடையில் 2 ஆயிரம் ரூபாயும் அதே பகுதியில் உள்ள மற்றொரு அரிசி கடையில் 2000 ரூபாய் தாருங்கள் தனது வாகனம் பழுதாகி விட்டாதாகவும் கூறி அங்கிருந்த கடை ஊழியர்களிடம் கேட்டுள்ளார் அப்பொழுது கடையில் பணியாற்றிய ஊழியர்கள் உரிமையாளர் வந்த பின்பு அவரிடம் கேட்டு பெற்றுக் கொள்ளவும் என்று கூறியுள்ளனர் .

சந்தேகமடைந்த கடை ஊழியர்கள் உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தனர் கடையின் உரிமையாளர் காவல்துறையுடன் வருவதை அறிந்த அந்த ஆசாமி தப்பி ஓட முயற்சித்துள்ளார் உடனடியாக காவல்துறையினர் அவரை பிடித்து கிழக்கு காவல் நிலையம் கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டதில் சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பகுதியைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது இவர் கடந்த 3-ஆம் தேதியிலிருந்து கோவில்பட்டி மார்கெட் பகுதிகளில் உள்ள கடைகளில் தான் காவல் உதவி ஆய்வாளர் என்று கூறி வசூல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து கடையின் உரிமையாளர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் சுஜித் ஆனந்த் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள கடைகளில் சென்று வசூல் நடத்த முயன்ற போது அங்கு பதிவான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )