மாவட்ட செய்திகள்
ஆண்டிபட்டி அருகே புறா பிடிக்க சென்ற போது கிணற்றில் விழுந்து வாலிபர் படுகாயம்.
ஆண்டிபட்டி அருகே புறா பிடிக்க சென்ற போது கிணற்றில் விழுந்து வாலிபர் படுகாயம் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே ரெங்கசமுத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் உள்ள 100 அடி ஆழமுள்ள கிணற்றில் பிராதுக்காரன்பட்டி என்னும் கிராமத்தினை சேர்ந்த ரமேஷ் என்பவரின் மகன் முத்துபாண்டி (வயது 19 ) இந்நிலையில் முத்துப்பாண்டி முத்தனம்பட்டி திருமண மண்டபத்தில் நடந்த விஷேசத்தில் கலந்துவிட்டு நண்பர்களுடன் கிணற்றில் புறா பிடிக்க சென்றுள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக தவறி கிணற்றில் முத்துபாண்டி விழுந்தார். மேலும் முத்துபாண்டி கிணற்றில் விழுந்ததினை அடுத்து அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் .
இந்த தகவலினை அறிந்த தீயணைப்புத்துறையினர் நிலைய அலுவலர் கணேசன் தலைமையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர் .தியணைப்பு படைவீரர்கள் விரைந்து வந்து கிணற்றில் விழுந்து அடிபட்டு இருந்த முத்துபாண்டியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் க விலக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.