மாவட்ட செய்திகள்
திண்டுக்கல்- மாவட்டத்தில் ரூபாய் 40.45கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்துவைத்து ரூபாய் 206.54 கோடி மதிப்பீட்டிலான 285 திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு .க .ஸ்டாலின் அவர்கள் தலைமையில் 54,230 பயனாளிகளுக்கு
அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா.

திண்டுக்கல் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அமைக்கப்பெற்ற விழா மேடையில் தமிழக முதல்வர் மு .க .ஸ்டாலின் அவர்கள் தலைமையில் திண்டுக்கல் மாவட்டத்தில் ரூபாய் 40 கோடியே 45 லட்சம் மதிப்பீட்டில் முடிவுற்ற 60 திட்டப்பணிகளை திறந்து வைத்து, ரூபாய் 206 கோடியே 54 லட்சம் மதிப்பீட்டில் 285 திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, தமிழக முதல்வர் மு .க .ஸ்டாலின் அவர்கள் 54,230 பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் நீர்வளத்துறை, பள்ளிக்கல்வித்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, பேரூராட்சிகள் துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, கால்நடை பராமரிப்பு, பால்வளம் ,மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, வேளாண் பொறியியல் துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை, தோட்டக்கலைத் துறை, மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, கூட்டுறவுத் துறை என மொத்தம் 40 கோடியே 45 லட்சம் ரூபாய் செலவில் முடிவுற்ற 60 திட்டப் பணிகளை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் திறந்து வைத்தார். அதனைத்தொடர்ந்து தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பிலும் ,ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பிலும், நீர்வளத்துறை சார்பிலும், பள்ளிக்கல்வித்துறை சார்பில் ,சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை சார்பாகவும் மொத்தம் 26 கோடியே 54 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படவுள்ள 285 திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் 54,230 பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்கு முன்னுதாரணமாக அனைத்து துறை சார்ந்த 38 பயனாளிகளுக்கு வழங்கி பேசியதாவது…

விடுதலை போராட்ட வரலாற்றில் சிறப்பு பெற்றது இந்த திண்டுக்கல் மண். திண்டுக்கல்லில் திமுகவிற்க்கு ஒராயிரம் வைரக்கற்கள் உள்ளது.எந்த தேர்தல் இருந்தாலும் இந்த மாவட்டம் திமுக சார்பில் எப்பொழுதும் வெற்றி பெறும் மாவட்டமாக திகழ்ந்து வருகிறது. அதற்க்கு காரணம் இங்கு இருக்கும் இரண்டு வைர கற்கள்தான். அது கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி,உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி ஆவார்கள்.மேலும் என் திட்டங்களையும், அறிவிப்பையும் யாரும் செயல்படுத்தாமல் என்னிடம் இருந்து தப்பிக்க முடியாது
எனவும் கூறினார். முன்னதாக பழனி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார், மற்றும் அமைச்சர்கள் சார்பில் முதல்வருக்கு செங்கோல் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் உடன் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே ,என் நேரு, கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.எஸ்.ஆர் ராமச்சந்திரன், உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர்அர. சக்கரபாணி, திண்டுக்கல் பாராளுமன்ற வேட்பாளர் பா. வேலுச்சாமி, பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ. பெ செந்தில்குமார், திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி, கரூர் நாடாளுமன்ற வேட்பாளர் செ.ஜோதிமணி, வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்திராஜன், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் ச.விசாகன் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு உயர் அலுவலர்கள், காவல்துறையினர் அனைவரும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
