மாவட்ட செய்திகள்
கோவில்பட்டியில் வீட்டில் 8 தோட்டாக்கள் பறிமுதல்-பெண்ணிடம் போலீஸ் விசாரணை.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சீனிவாச நகர் 3வது தெருவை சேர்ந்தவர் அழகு பாண்டி இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில் இவரது மனைவி அமுதவல்லி மட்டும் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார்.கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சீனிவாச நகர் பகுதியை சேர்ந்த குட்டி என்ற பெண்ணிடம் ஆனந்தவல்லி பணம் கடன் வாங்கியுள்ளார் பணத்தை தொடர்ந்து ஆனந்தவல்லியிடம் குட்டி கேட்டு வந்த நிலையில் திடீரென ஆனந்தவல்லி வீட்டில் இருந்து வேறு இடத்திற்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் கடந்த சில தினங்களாக ஆனந்தவல்லியின் வீட்டில் மாமனார் மாமியாரை வசித்து வருவதை அறிந்த குட்டி ஆனந்தவல்லி வீட்டுக்கு சென்று மாமனார் மாமியாரை வெளியேற்றி வீட்டை பூட்டிக்கொண்டு சாவியை எடுத்து சென்றுள்ளார். பின்னர் ஆனந்தவல்லி வீட்டுக்கு சென்று பீரோவை திறந்து பார்த்த போது 8 துப்பாக்கி தோட்டாக்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தவர் உடனடியாக கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார் சம்பவ இடத்திற்கு வந்த மேற்கு காவல் துறையினர் 8 தோட்டாக்கள் பறிமுதல் செய்தனர்,கோவில்பட்டியில் ஒரு வீட்டில் 8 தோட்டாக்கள் பறிமுதல் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
