மாவட்ட செய்திகள்
கோவில்பட்டி அருகே டாக்டர் கலைஞர் படிப்பகம் திறப்பு விழா.
கோவில்பட்டி அருகே டாக்டர் கலைஞர் படிப்பகம் திறப்பு விழா கனிமொழி எம்பி கலந்துகொண்டு படிப்பகதை திறந்து வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கீழப்பாண்டவர்மங்கலத்தில் டாக்டர் கலைஞர் படிப்பகம் திறப்பு விழா நடந்தது. விழாவில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமை வகித்தார்.
தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, திமுக மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் சண்முகராஜ் முன்னிலை வகித்தனர். திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் முருகேசன் வரவேற்புரை ஆற்றினார்.
விழாவில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கலந்துகொண்டு டாக்டர் கலைஞர் படிப்பகத்தை திறந்து வைத்து குத்து விளக்கை ஏற்றி சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியபோது, தூத்துக்குடிக்கு இன்று மாலை முதலமைச்சர் வருகை தர உள்ளார். இந்நிலையில் கலைஞர் படிப்பகத்தை திறப்பு நிகழ்ச்சியில் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இங்கு வந்துள்ளோம். தூத்துக்குடியில் 1100 ஏக்கர் பரப்பளவில் ரூ.1000 கோடி செலவில் பர்னிச்சர் பூங்காவுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்ட உள்ளார். இதனால் இப்பகுதியில் உள்ள மாணவர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும். கோவில்பட்டியில் உள்ள மாணவர்களுக்கும் வேலை வாய்ப்புகள் கிடைக்கும். இது போன்ற மக்கள் நல திட்டங்களை முதலமைச்சர் தொடர்ந்து வழங்கி வருகிறார், என்றார்.
தொடர்ந்து, கலைஞர் படிப்பகத்தை ரூ.10 லட்சம் மதிப்பில் சொந்த செலவில் கட்டிக் கொடுத்த சண்முகராஜாவை கனிமொழி எம்.பி., அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் கௌரவப்படுத்தினார், மேலும் படிப்பதற்கு இடம் கொடுத்த மூன்று பேரையும் கௌரவித்தனர்.
முன்னதாக கோவில்பட்டி அருகே உள்ள பாண்டவர்மங்கலத்தில் தந்தை பெரியாரின் திருவுருவச் சிலைக்கு கனிமொழி எம்.பி. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர், நிகழ்ச்சியில் நகர திமுக செயலாளரும் நகராட்சி தலைவருமான கருணாநிதி, பொதுக்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் ரமேஷ், மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் ராமச்சந்திரன், வழக்கறிஞர் அணி அழகர்சாமி, மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் சந்தானம், மாவட்ட பிரதிநிதிகள் மாரிச்சாமி, ரவீந்திரன், புஷ்பராஜ், சிறுபான்மை பிரிவு மாவட்ட துணை அமைப்பாளர் அமலி பிரகாஷ், வர்த்தக அணி துணை அமைப்பாளர் சூரியராஜ், நகர மாணவரணி துணை அமைப்பாளர் தாமோதர கண்ணன், மாத்தையா, கனகராஜ், செல்வ மணிகண்டன், ஒன்றிய கவுன்சிலர் பொன்னுதுரை, கிளைக் கழகச் செயலாளர்கள் கஜேந்திரன், சிவசெந்தூர், மேற்கு ஒன்றிய மகளிர் அணி அமைப்பாளர் பிரேமா துரைமுருகன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.