BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

எத்திலோடு ஊராட்சி கிராம சபை கூட்டத்தை ஒத்தி வைக்க கோரி வார்டு உறுப்பினர்கள் திடீர் போராட்டம்.

சிலுக்குவார்பட்டியில் கிராம நிர்வாக அலுவலரை மாற்றக் கோரி பொதுமக்கள் வலியுறுத்தல்
நிலக்கோட்டை,மே.2- திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கோட்டூர் ஊராட்சி மைக்கேல் பாளையத்தில் ஊராட்சி மன்ற தலைவர்  சுகந்தா கரிகால பாண்டியன் தலைமையில் கிராம சபை கூட்டம் மைக்கேல் பாளையம் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு நடைபெற்றது. கூட்டத்தில் துணைத் தலைவர் கீதா முன்னிலை வகித்தார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பின்வருமாறு: கூட்டத்தில் பொதுமக்கள் தரப்பாக உடனடியாக கிராமத்தில் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு அனைவருக்கும் வீடு கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை இதனைத் ஏற்று கோரிக்கை நிறைவேற்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை அதிகாரியும் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய மண்டல பொறுப்பாளருமான முருகதாஸ், வட்டார வளர்ச்சி அலுவலர் குணசுந்தரி, வட்டார வளர்ச்சி அலுவலர் ( கிராம ஊராட்சி) திருமலைசாமி, ஊராட்சி செயலாளர் பாண்டியராஜ் உள்பட கலந்து கொண்டனர.  இதேபோன்று நிலக்கோட்டை அருகே உள்ள முசுவனூத்து ஊராட்சி மன்ற தலைவர் ஜெயப்பிரகாஷ் தலைமையில் கிராம சபை கூட்டம் மிளகாய் பட்டியில் கிராமத்தில் நடைபெற்றது.

கூட்டத்தில் மிளகாய் பட்டி, ஆண்டிபட்டி, முசுவனூத்து உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளி மாணவ, மாணவிகள், விவசாயிகள் பயன்பெறும் விதமாக அரசு பஸ் உடனடியாக இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டது. இக்கூட்டத்தில் துணைத் தலைவர் பிரபாவதி ரவி, ஊராட்சி செயலாளர் முகமது அத்திப், உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோன்று பிள்ளையார்நத்தம் ஊராட்சியில் உள்ள  ஊராட்சி மன்ற தலைவர் முனி ராஜா தலைமையில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளதால் மதுரை மாவட்டம், குருவித்துரை  வரை வரும் அரசு பஸ் மதுரையில் இருந்து இயக்கப்படுகிறது. அதனை நீடித்து அணைப்பட்டி வீர ஆஞ்சநேயர் கோயில் வரை அரசு பஸ் இயக்க வர அரசு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை ஏற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் துணைத்தலைவர் அம்சவல்லி வீரகாமு, ஊராட்சி செயலாளர் சின்னசாமி மற்றும் வார்டு உறுப்பினர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதேபோன்று நிலக்கோட்டை அருகே உள்ள சிலுக்குவார்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் செல்வி ஜெயசீலன் தலைமையில் ஆர்சி மேல்நிலை பள்ளி வளாகத்தில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ஊராட்சியில் உள்ள பொதுமக்கள் சுமார் 200க்கும் மேற்பட்டவர்கள் திரண்டு சிலுக்குவார் பட்டி கிராமம் அலுவலகத்தில் தற்போது கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றும் கிராம அலுவலரை பல்வேறு வகையில் கிராம மக்களுக்கு அலைக்கழிப்பு செய்து வருகிறார். ஆகையால்  கிராம நிர்வாக அலுவலரை  மாற்ற கோரி கோஷங்கள் எழுப்பி பொதுமக்கள் தீர்மானம் கொண்டுவர வேண்டுமென்று தலைவரை வலியுறுத்திப் பேசினார்கள். இதன் காரணமாக அந்த நேரம் சற்று பரபரப்பு ஏற்பட்டது.  இக்கூட்டத்தில் துணைத்தலைவர் சங்கீதா, ஊராட்சி செயலாளர்  கணேசன், மற்றும் வார்டு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோன்று எத்திலோடு ஊராட்சி மன்ற தலைவர் ராஜலட்சுமி திருப்பதி தலைமையிலும், ஊராட்சிமன்றத் துணைத் தலைவர் காமாட்சி முன்னிலையிலும் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திலிருந்த வார்டு உறுப்பினர்கள் ஆசை, பழனியம்மாள் ஆகியோர்கள்  பாஞ்சாலங்குறிச்சி, ஆவாரம்பட்டி , கருத்தாண்டிபட்டி ஆகிய 3 கிராமங்களில் உள்ள பொதுமக்களுக்கு  குடிநீர் வழங்குவதில் முரண்பாடு பாரபட்சம் காட்டப்படுகிறது ஆகையால் கூட்டத்தை நடத்த கூடாது ஒத்திவைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதன் காரணமாக சற்று நேரம் சலசலப்பு ஏற்பட்டது. கூட்டம் சிறிது நேரம் நிறுத்தப்பட்டு பின்னர் கூட்டம் அங்கிருந்த மக்களை வைத்து கூட்டத்தை நடத்தி முடித்தனர். ஊராட்சி செயலாளர் சின்னன், மற்றும் வார்டு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.  நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், கூவனூத்து  ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் அன்பழகன் தலைமையில் கிராம சபைக்கூட்டம்
வாலாங்கோட்டை கிராமத்தில் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கிராமத்தின் அருகே உள்ள மலைப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக அரசு அனுமதியின்றி மர்ம நபர்கள் சிலர் ஜே. சி. பி உள்ளிட்ட பல்வேறு இயந்திரங்களை வைத்து மண்ணை திருடி வருகிறார்கள். இதன் காரணமாக சுற்றுச்சூழல் மாசு பட வாய்ப்பு இருக்கிறது அதனால் இதனை தடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். இக்கூட்டத்தில் ஊராட்சி செயலாளர் துரைமாணிக்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
படவிளக்கம்: எத்திலோடு கிராமத்தில் கிராமசபை கூட்டம் நடந்த போது எடுத்த படம்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

 

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )