BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

தேனி மாவட்ட சிவசேனா கட்சி மாவட்ட பொருளாளர் கணேசன் கந்துவட்டி கொடுமையால் தேனி மாவட்ட ஆட்சியர் வளாகம் முன்பு தீக்குளிக்க முயற்சி.

தேனி மாவட்டம் அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட பொம்மையகவுண்டன்பட்டியை சேர்ந்த கணேசன்.

 

இவர் ஆட்டோ தொழிலாளியாகவும் சிவசேனா கட்சி மாவட்ட பொருளாளர் ஆகவும் உள்ளார்.இந்நிலையில் கடந்த கொரோனா காலத்தில் இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ஆச்சி கார்த்திக் இடம் தினசரி தவணை தொகையாக பத்தாயிரம் ரூபாய் வாங்கி உள்ளார்.

 

ஆனால் பணத்தை முழுவதுமாக கட்ட இயலாததால் கடனை திருப்பி தருமாறு பலமுறை கேட்டுள்ளார் ஆனால் கடனை திருப்பி செலுத்தாததால் தனது ஆட்டோவை தூக்கி சென்றதாக கூறி மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகத்தில் தனது வாழ்வாதாரம் முழுவதுமாக பாதிக்கபட்டதாக கூறி தீக்குளிக்க முயன்றார்.

 

மாவட்ட ஆட்சித் தலைவர் வளாகத்தில் இருந்த காவல்துறையினர் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )