மாவட்ட செய்திகள்
இந்தியன் ஆயில் நிறுவனத்தில் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு பணி வழங்க வேண்டும் – பாரதீய பொது தொழிலாளர் சங்கத்தினர் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

திருச்சி மாவட்டம் இனாம் குளத்தூரில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் கியாஸ் நிரப்பும் மையம் செயல்பட்டு வருகிறது இந்த மையத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனர். பல்வேறு சங்கங்கள் உள்ளது. இந்நிலையில் இந்த மையத்தில் பாரதிய பொது தொழிலாளர் சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தில் இணைந்துள்ள முப்பத்தி ஏழு ஊழியர்களை எந்தவித முன்னறிவிப்பும் இன்றி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசுவிடம் துணைச் செயலாளர் கணேசன் தலைமையில் மனு அளித்தனர்.

இதைத்தொடர்ந்து செய்தியாளருக்கு பேட்டி அளித்த துணைச் செயலாளர் கணேசன் இந்தியன் ஆயில் எம்ப்ளாயீஸ் யூனியனில் கடந்த பிப்ரவரி மாதம் அந்த யூனியனில் இருந்து விலகி பாரதிய பொது தொழிலாளர் சங்கத்தில் இணைந்தனர். இந்நிலையில்
பாரதிய பொது தொழிலாளர் சங்கத்தின் உறுப்பினர்களை பழிவாங்கும் போக்கில் செயல்படும் இந்தியன் ஆயில் எம்ப்ளாயீஸ் யூனியனை சேர்ந்தவர்கள் கடந்த பிப்ரவரி மாதம் அந்த யூனியனில் இருந்து விலகி பாரதிய பொது தொழிலாளர் சங்கத்தில் இணைந்த ஊழியர்கள் முப்பத்தி ஏழு ஊழியரை திடீரென 1ம் தேதி முதல் வேலையில் நீக்கம் செய்துள்ளதாக தெரிவித்து அறிவிப்புப் பலகையில் ஒரு அறிக்கை ஒட்டி உள்ளனர். இது தொடர்பான எந்த முன்னறிவிப்பும் கொடுக்கப்படவில்லை பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்கள் கடந்த 1996ஆம் ஆண்டு முதல் இங்கு பணிபுரிந்து வருகின்றனர்.

இதுதொடர்பாக சென்னையில் உள்ள உதவி தொழிலாளர் ஆணையரிடம் இதுகுறித்து முறையிட்டோம் தொடர்ந்து நடைபெற்ற விசாரணைக்கு பின்னர் அவர் கடந்த மாதம் 29ம் தேதி அறிக்கையை அளித்துள்ளார். அந்த அறிக்கையை எங்களுக்கு மறைத்துள்ளனர். மேலும், பணி வங்கி வழங்கிய ஒப்பந்ததாரர்களுக்கு அவர் அனுப்பி உள்ளார். அந்த அறிக்கை எல்லாம் மறைத்துவிட்டு எங்கள் சங்கத்தினர் கியாஸ் நிரப்பும் மையத்தின் எதிராக செயல்படுவது போல தோற்றத்தை ஏற்படுத்தி மாவட்ட ஆட்சியரிடத்தில் புகார் கொடுத்துள்ளனர். இதுதொடர்பான மாவட்ட ஆட்சியர் சிவராசை சந்தித்து புகார் மனு கொடுத்துள்ளோம். இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார். எனவே உடனே நடவடிக்கை எடுத்து பணிநீக்கம் செய்யப்பட்ட 37 ஊழியர்களுக்கும் வாழ்வாதாரத்தை இழந்துள்ள அவர்களுக்கு பணி வழங்க வேண்டும் என தெரிவித்தார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
