மாவட்ட செய்திகள்
கோவில்பட்டி அருகே மாட்டு வண்டி பந்தயம்-இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்த காளைகள் – முதல் பரிசை தட்டிச் சென்ற மாட்டு வண்டிக்கு ஒரு லட்சம் பரிசு.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே விளாத்திகுளம் உள்ள புதூரில் திருமலை நாயக்கர் 439-வது பிறந்த நாளை முன்னிட்டு புதூர் வட்டார கம்மவார் சங்கம் சார்பில் மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது.

பெரிய மாட்டு வண்டிக்கு 12 கிலோ மீட்டர் தூரமும் சின்ன மாட்டிற்கு 10 கிலோ மீட்டர் தூரமும் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இதில் முதல் பரிசாக 1,06,006 ரூபாயும் இரண்டாம் பரிசாக 80,006 ரூபாயும் மூன்றாம் பரிசு 60,006 ரூபாயும்
நான்காம் பரிசு 20,000 மதிப்புள்ள எல்.இ.டி டிவியும் வழங்கப்பட்டது.

பெரிய மாட்டு வண்டி போட்டியை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜீ.வி மார்க்கண்டேயன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
பெரிய மாட்டு வண்டியில் மொத்தம் 11ஜோடிகள் கலந்து கொண்டன.
இதில் வெற்றி பெற்ற மாட்டு வண்டிகளுக்கு முதல் பரிசாக ஒரு லட்சத்து ஆறு ஆயிரத்து ஆறு ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டது,
முதல் பரிசு துர்காம்பிகா சீவலப்பேரி, இரண்டாம் பரிசு விஜயகுமார் மெடிக்கல் சண்முகபுரம், மூன்றாம் பரிசு வேலாங்குளத்தை சேர்ந்த கண்ணன்,மாட்டு வண்டியும் ரொக்கப்பரிசு மற்றும் எல்.இ.டி டிவி யை தட்டி சென்றன.

சிறிய மாட்டு
வண்டியில் மொத்தம் 17 ஜோடி மாட்டுவண்டிகள் கலந்து கொண்டன பந்தய தூரமாக 8 கிலோமீட்டர் நிர்ணயிக்கப்பட்டது.
இதில் முதல் பரிசு அனுமந்தான்பட்டியை சேர்ந்த இளங்கோ,
இரண்டாம் பரிசு தேனி மாவட்டத்தைச் சேர்ந்த
பூக் கொல்லை மாட்டு வண்டியும்,மூன்றாம் பரிசு கடம்பூர் கருணாகர ராஜா மாட்டு வண்டியும் வெற்றி பெற்றது.
இப்போட்டியை காண விளாத்திகுளம், சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கிராம மக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு வீரர்களை கைதட்டி உற்சாகப்படுத்தினர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
