BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

கிணற்றில் மூழ்கி முதியவர் பலி!

ஒட்டந்தாங்கல் கிராமத்தில் விவசாய கிணற்றில் குளிக்கச் சென்ற முதியவர் நீரில் மூழ்கி பலியானார். இறந்தவர் உடலை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.
வேலூர் மாவட்டம், காட்பாடி உள்ளிபுதூர் அடுத்த ஒட்டந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் சாலமன் வயது 65 .இவர் நேற்று அதே பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் குளிக்க சென்றுள்ளார் . குளிக்க சென்றவர் நேற்றுமுன்தினம் முழுவதும் வீடு திரும்பவில்லை .இதனையடுத்து சாலமனின் உறவினர்கள் அப்பகுதியில் பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்க வில்லை. இதனையடுத்து அந்தப் பகுதியில் உள்ள விவசாய கிணற்றின் அருகே நேற்று சாலமனின் உடைகள் இருப்பதை கண்ட உறவினர்கள் உடனடியாக அருகில் உள்ள காட்பாடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ நடந்த இடத்திற்கு விரைந்து சென்ற காட்பாடி தீயணைப்பு நிலைய அலுவலர் முருகேசன் ,பால்பாண்டி, நிலைய பணியாளர்கள் தீரன், சதீஷ், பழனி, ஆகியோர் விவசாய கிணற்றில் இறங்கி சுமார் ஒரு மணி நேரமாக போராடி சாலமனின் உடலை மீட்டனர்.
இதுகுறித்து திருவலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த திருவலம் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் சுரேஷ் குமார் சாலமனின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குளிக்க சென்ற 65 வயது முதியவர் நீரில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )