மாவட்ட செய்திகள்
ஊராட்சி மன்ற தலைவரை கண்டித்து தீக்குளித்த குடும்பம்!
பொன்னை காவல்நிலையம் முன்பாக நிலங்களை அபகரிக்கும் ஊராட்சிமன்ற தலைவர் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து ஒருவர் தீக்குளிக்க முயற்சி செய்ததால் திடீர் பதட்டம் ஏற்பட்டது.
வேலூர் மாவட்டம் ,காட்பாடி அடுத்த பொன்னை அருகேயுள்ள என்.பி.என் .பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ராணுவ வீரர் ஜெயச்சந்திரன். இவருக்கு அக்கிராமத்தில் சொந்தமாக 10 செண்ட் நிலம் உள்ளது .இதனை அக்கிராமத்தின் ஊராட்சிமன்றத் தலைவர் ரமேஷ் என்பவர் நேற்றிரவு 20-க்கும் மேற்பட்ட அடியாட்களுடன் புகுந்து இடத்தை ஆக்கிரமித்து வீடு கட்ட முயன்றுள்ளார் .இதனால் ஏற்கனவே இவர் மீது ராணுவ வீரர் ஜெயச்சந்திரன் 16-3-22 அன்று புகார் அளித்தார் .
ஆனால் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. நேற்றிரவு அடியாட்களுடன் வந்து இடத்தை ஆக்கிமிப்பது குறித்தும் கொலை மிரட்டல் குறித்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் காலை ஜெயச்சந்திரன் பொன்னை காவல்நிலையம் முன்பாக வந்தார். இதையடுத்து ஜெயச்சந்திரன் குடும்பத்தினர் முற்றுகையிட்டு கோஷங்களை எழுப்பி தீக்குளிக்க முயன்றனர் .இதே போன்று ஒரு கணவால் கைவிடப்பட்ட பெண் இடத்தை அபகரித்துள்ளார் .முடி திருத்தும் ஒரு தொழிலாளியின் இடத்தையும் அபகரித்துள்ளார் தலைவர். இதனால் பாதிக்கப்பட்ட அனைவரும் 15-க்கும் மேற்பட்டோர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு தீக்குளிக்க முயன்றதால் அங்கு பெரும் பரபரப்பு காணப்பட்டது. காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சட்டம் தன் கடமையை செய்யுமா? பொதுமக்கள் , சமூக ஆர்வலர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.