மாவட்ட செய்திகள்
வேலூர் மாவட்டம் விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் இதயம் தானம். வேலூரிலிருந்து சென்னைக்கு சாலை மார்க்கமாக கொண்டுசெல்லப்பட்ட இருதயம்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த மதனஞ்சேரி பகுதியை சேர்ந்த ரவி- ரோஜி தம்பதியினரின் மகன் 21 வயது இளைஞர் தினகரன். இவர் கூலி வேலை செய்து வருகிறார். பணி முடித்துவிட்டு கடந்த 29-ம் தேதி இருசக்கர வாகனத்தில் குடியாத்தத்தில் இருந்து பேர்ணாம்பட் வழியாக வாணியம்பாடி செல்லும் போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட இருசக்கர விபத்தில் படுகாயமடைந்து வேலூரில் உள்ள சிஎம்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று மூளைச்சாவு அடைந்து உள்ளார்.
இதனையடுத்து இவரது உறவினர்கள் அனுமதியின் பெயரில் இஞைளர் தினகரனின் இருதயம், சிறுநீரகம் மற்றும் கல்லீரல் ஆகியவை ஆகியவை தானம் செய்யப்பட்டுள்ளது.
இருதயம் சென்னையில் கிரின்வேஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு இன்று மாலை 3 மணிக்கு வேலூரில் இருந்து சாலை மார்க்கமாக ஆம்புலென்ஸில் கொண்டு செல்லப்பட்டது. ஆம்புலென்ஸை வேல்முருகன் என்வர் ஓட்டிச்சென்றுள்ளார். இதுபோன்று அவசர காலங்களில் உடல் உறுப்புகளை விரைவாக எடுத்துச் செல்வதில் நான்கு ஆண்டு அனுபவம் மிக்கவர்.
சுமார் 150 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட சென்னைக்கு பொதுவாக பயண நேரம் சுமார் 3 மணி நேரம் எடுக்கும். ஆனால் தற்போது 1 1/2 மணி நேரத்தில் சென்னை கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதற்க்காக வேலூரில் இருந்து ஆம்புலென்ஸ் செல்லும் பாதையில் ராணிப்பேட்டை மாவட்ட எல்லை வரை சுமார் 50 க்கும் மேற்பட்ட காவலர்கள் நிறுத்தப்பட்டு போக்குவரத்து சீர் செய்யப்பட்டு ஆம்புலென்ஸ் விரைவாக செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்த நிகழ்விற்கு கிரின் காரிடார் என அழைக்கப்படும். மூளைச்சாவு அடைந்த ஒருவரது உடலில் இருந்து இருதயம் எடுக்கப்பட்ட மூன்று மணி நேரத்திற்குள் அடுத்தவரின் உடலில் பொருத்த வேண்டும். இதற்காக பிரத்யேகமாக உள்ள ஐ சி யு ஆம்புலன்ஸ்கள் பயன்படுத்தப்படும் இதில் இரண்டு டெக்னீஷியன்கள் மற்றும் இரண்டு பாராமெடிக்கல் ஊழியர்கள் மருத்துவர்கள் இருப்பர்.
மூளைச்சாவு அடைந்த ஒருவரின் உடலிலிருந்து இருதயத்தை எடுப்பதற்காக அனுமதிக்கப்பட்ட மருத்துவமனைகளில் உள்ள இருதய மாற்று அறுவை சிகிச்சை மருத்துவ குழு முடிவு செய்யும் இருதயம் மற்றொருவருக்கு பொருத்தும் தன்மையில் உள்ளதா ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா என இக்குழு ஆய்ந்து கூறிய பிறகே இருதயம் தானமாக வழங்கப்படும்.
உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்காக தனியார் மருத்துவமனைகள் அரசிடமிருந்து அனுமதி பெற்றிருக்கவேண்டும் அனுமதி பெற்ற மருத்துவமனைகளில் மட்டுமே உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படும்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.