மாவட்ட செய்திகள்
காட்பாடி பிரியாணி ஹோட்டலில் வாடிக்கையாளர்களை ஏமாற்றும் அவலம்!
காட்பாடியில் பிரியாணி ஹோட்டலில் வாடிக்கையாளர்களை ஏமாற்றி விற்பனை செய்யும் அவலம் தொடர் கதையாக மாறியுள்ளது. வேலூர் மாவட்டம், காட்பாடியில் ஆஸ்கார் தியேட்டர் எதிரில் எஸ் பி ஆர் எனப்படும் பிரியாணி ஹோட்டல் செயல்படுகிறது .இந்த ஓட்டலில் அனைத்துவிதமான அசைவ உணவுகள் விற்பனை செய்யப்படுகிறது. இதில் குறிப்பாக அஜினமோட்டோ கலக்காமல் எந்த உணவுப் பொருட்களையும் இவர்கள் வாடிக்கையாளர்களுக்கு பரிமாறுவது இல்லை .குறிப்பாக அஜினாமோட்டாவின் அளவு சுவைக்காக அதிகம் உணவில் சேர்க்கப்படுகிறது. அதேபோன்று சிக்கன் பகோடா, மீன் வருவல் போன்றவற்றில் ரசாயனம் கலந்த கலவை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. இவற்றால் வயிற்று உபாதைகளுக்கு வாடிக்கையாளர்கள் உள்ளாக நேரிடும் என்பது தெரிந்தும் தெனாவெட்டாக வேண்டுமென்று இது போன்ற ரசாயன கலவைகளை ஹோட்டல் நிர்வாகம் கலந்து விற்பனை செய்து வருகிறது. இது உணவு கலப்பட அதிகாரிக்கு தெரியுமா தெரியாதா? அல்லது கையூட்டு வாங்கிக் கொண்டு கண்டும் காணாமல் விட்டு விட்டாரா என்பதும் சிதம்பர ரகசியமாகவே உள்ளது .குறிப்பாக இது போன்ற ஓட்டல்களில் அதிரடி வேட்டை நடத்தி இந்த ஓட்டல்களில் என்னென்ன ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன என்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது வாடிக்கையாளர்களின் ஒருமித்த கருத்தாக உள்ளது. குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால் காட்பாடியில் இதுபோன்ற உணவு நிறுவனங்கள் அளவுக்கு அதிகமாக தான்தோன்றித்தனமாக செயல்பட்டு வருகின்றன .இதை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து சீல் வைக்க உணவுத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. வாடிக்கையாளர்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பை உணவு துறை மற்றும் உணவு கலப்பட துறை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தங்களது பணத்தை கொடுத்து தங்களுக்குத் தானே சூனியம் வைத்துக் கொள்ளும் வாடிக்கையாளர்களை காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே உணவு கட்டுப்பாட்டு அலுவலருக்கு பொதுமக்கள் சார்பில் தெரிவிக்கும் ஒரே வேண்டுகோள் என்று சொல்லலாம். மாவட்ட நிர்வாகமும் இதுபோன்ற புகார்களை இல்லாத வகையில் களைவதற்கு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது பொது மக்களின் விருப்பமாக உள்ளது. சிக்கன் பகோடாவில் வெறும் எலும்புகளை மட்டுமே எண்ணெயில் போட்டு வறுத்து நுகர்வோர் தலையில் கட்டி பணம் ஆக்குகின்ற இந்த எஸ் பி ஆர் ஓட்டல் நிர்வாகம் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்படி எலும்பு துண்டுகளை எண்ணெயில் வறுத்து எடுத்து நுகர்வோரை கண்கட்டி வித்தை காட்டி ஏமாற்றும் எஸ் பி ஆர் நிறுவனத்தின் உரிமையாளரை தொடர்பு கொண்டு உங்கள் ஹோட்டலில் நுகர்வோருக்கு சர்வ் செய்யப்படும் சிக்கன் பகோடாவில் வெறும் தோலும் எலும்பு மட்டுமே உள்ளது .கறித்துண்டு என்பது சுத்தமாக இல்லை என்று தெரிவித்தால் நாங்கள் அப்படித்தான் பரிமாறுவோம். விருப்பம் இருந்தால் சாப்பிடுங்கள் இல்லை என்றால் வெளியே செல்லுங்கள் என்று தெனாவெட்டாக பதிலளிக்கிறார் எஸ் பி ஆர் நிறுவனத்தின் உரிமையாளர். இது போன்ற நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசு எந்திரங்கள் கைகட்டி வேடிக்கை பார்ப்பது படு கேவலமாக உள்ளது. இதுபோன்ற நிறுவனத்திடம் உணவுத்துறை அதிகாரிகள் பிச்சையெடுத்து வயிறு வளர்க்கிறார்கள் என்று சில பொதுமக்கள் புலம்பியவாறு செல்கின்றனர். சாப்பிட்ட உடன் பில் என்ற பெயரில் பணத்தை மட்டும் கறக்கும் எஸ் பி ஆர் நிறுவனம் அதற்கு தகுந்தார்போல் ஏன் உணவை தரமுடன் சர்வ் செய்வதில்லை என்று ஆதங்கப்படுகின்றனர் வாடிக்கையாளர்கள். வாடிக்கையாளர்களின் வயிறு நிறையவும் அவர்கள் திருப்தியுடன் சாப்பிட்டுவிட்டு செல்லவும் வழி வகையை ஏற்படுத்த வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது. நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் முன்வருமா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.