மாவட்ட செய்திகள்
செங்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளி குடியேறும் போராட்டம்.



திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகள் 200க்கும் மேற்பட்டோர் புதிய பேருந்து நிலையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான கழிப்பிட வசதி செய்து தரவேண்டும் எனவும் இரு மாதத்திற்கு ஒரு முறை மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாற்றுத்திறனாளிக்கான குறைதீர்வு கூட்டம் நடத்த வேண்டும் மாதம் ஒருமுறை மாவட்ட கோட்டாட்சியர் தலைமையில் குறைதீர்வு கூட்டம் நடத்த வேண்டும் என உட்பட 4 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி செங்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பிறகு தகவலறிந்து வந்த மாவட்ட கோட்டாட்சியர் வெற்றிவேல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மாற்றுத் திறனாளிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி உங்கள் கோரிக்கை குறித்து மாவட்ட ஆட்சியரிடம் கூறி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எழுத்துபூர்வமாக உறுதி அளித்த பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
