BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

அந்தியூர் அருகே ஸ்ரீசெலம்பூர்அம்மன் கோவில் குண்டம் திருவிழா கோலாகல கொண்டாட்டம்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்துள்ள கோவிலூர் பகுதியில் அமைந்துள்ளது மிகவும் பழமையானதும் பிரசித்திபெற்றமான செலம்பூர் அம்மன் திருக்கோவில்.

இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் தீ மிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும்.

அதன்படி கடந்த 15 நாட்களுக்கு முன் பூச்சாட்டுதலுடன் விழா துவங்கியது. நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வந்த நிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் திருவிழா இன்று நடைபெற்றது முன்னதாக கோவிலூர் வனப்பகுதியில் சென்று அம்மனை அழைத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது .

இத்திருவிழாவில் அந்தியூர் சுற்றுவட்டார பகுதியில் இருந்து 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )