மாவட்ட செய்திகள்
திருச்சியில் அன்பில் அறக்கட்டளை சார்பாக 4ஆயிரம் மாணவ மாணவிகளுக்கு கல்வி உபகரணங்களை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார்.


திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் அன்பில் அறக்கட்டளை சார்பில் திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் 4000 மாணவ – மாணவிகளுக்கு திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில்
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி கல்வி உபகரணங்களை வழங்கி தேர்வு எழுதி வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தார்.


இந்நிகழ்வில் முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.என்.சேகரன், ஒன்றிய கழகச் செயலாளர் கே.எஸ்.எம் கருணாநிதி, உயர் கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
