மாவட்ட செய்திகள்
நிலக்கோட்டை அருகே ஆடுகளை வேட்டையாடிய வெறி நாய்கள் 10 ஆடுகள் பலி.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே பட்டியில் அடைக்கப்பட்ட ஆடுகளை வெறிநாய்கள் வேட்டையாடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நிலக்கோட்டை சேர்ந்தவர் விஜய கண்ணன் ஆடு வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டு வருகிறார் பாப்பிநாயக்கன்பட்டி என்ற கிராமத்தில் உள்ள ஒரு விவசாய நிலத்தில் கிடை அமர்வதற்காக தனது ஆடுகளைக் கொண்டுவந்து பட்டியில் அடைத்துள்ளார்.

இந்நிலையில் பட்டியில் அடைக்கப்பட்ட ஆட்டுக்குட்டிகள் கடித்துக் குதரப்பட்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார் அப்பகுதியில் சுற்றி திரிந்த வெறிநாய்கள் யாரும் இல்லாத வேளையில் பட்டிக்குள் புகுந்து பிறந்து 20 நாட்கள் ஆன ஆட்டுக்குட்டிகளை குறி வைத்து கடித்து குதறி இருப்பது தெரியவந்தது இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்த விஜய கண்ணன் வளர்ப்பு ஆடுகளை குறிவைக்கும் வெறி நாய்களை பிடிக்க வேண்டும் என பேரூராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
