மாவட்ட செய்திகள்
கிருஷ்ணகிரியில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பெண் குழந்தைகளை காப்போம் தலைப்பில் விழிப்புணர்வு பேரணி.
கிருஷ்ணகிரியில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பெண் குழந்தைகளை காப்போம் தலைப்பில் விழிப்புணர்வு பேரணி மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து துவக்கி வைத்தார்
ஆண்டுதோறும் மார்ச் மாதம் 8ஆம் தேதி உலக மகளிர் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. பெண்களுக்கு பெருமை சேர்க்கும் பெண் குழந்தையை பாதுகாக்க வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்த கருத்தரங்குகள் இந்த நாளில் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் கிருஷ்ணகிரி இந்திய மருத்துவர் சங்கம் மற்றும் மருத்துவ சங்க பெண் பிரிவு சார்பாக உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பெண் குழந்தைகளை பாதுகாப்போம் என்கிற தலைப்பில் விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது. கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி தலைமை மருத்துவமனையில் துவங்கிய
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் சரண் தேஜஸ்வி முன்னிலை வகித்தார். இந்த விழிப்புணர்வு பேரணியில் பெண் குழந்தைகளை பாதுகாப்போம் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்போம் போன்ற விழிப்புணர்வு பதாகைகளுடன் நூற்றுக்கும் மேற்பட்ட செவிலியர் கல்லூரி மாணவ மாணவிகள் முழக்கங்களை எழுப்பிப்படி ஊர்வலமாக சென்றனர். அரசு மருத்துவமனையில் துவங்கிய இந்தப் பேரணி காந்தி காந்தி ரோடு ரவுண்டானா பெங்களூர் ரோடு உள்ளிட்ட முக்கிய சாலை வழியாக சென்று நிறைவடைந்தது.
இந்த பேரணியில் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் அசோகன் சுகாதாரத்துறை துணை இயக்குனர் பரமசிவம் துணை இயக்குனர் கோவிந்தன் மற்றும் இந்திய மருத்துவ சங்க தலைவர் செல்வி இளங்கோவன் அமுதா தனசேகரன் எழிலரசி ஊராட்சி கண்ணகி கமலநாதன் மற்றும் ஒருங்கிணைப்பாளர் தனசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.