மாவட்ட செய்திகள்
காட்பாடி 1வது மண்டல தலைவர் புஷ்பலதா 14வது வார்டில் ஆய்வு!
வேலூர் மாநகராட்சி 1வது மண்டல குழு தலைவர் வ.புஷ்பலதா வன்னியராஜா 14வது வார்டு பகுதிக்கு உட்பட்ட ராதாகிருஷ்ணா நகரில் தேங்கி கிடக்கும் கால்வாய் நீரை பார்வையிட்டார். இதை உடனடியாக சரிசெய்யச் சொல்லி உத்தரவிட்டுள்ளார். அத்துடன் அங்குள்ள பூங்காவையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த பணியின் போது அவருடன் 1வது மண்டல உதவி ஆணையர் செந்தில் குமரன் மற்றும் 14வது வார்டு மாமன்ற உறுப்பினர் சாமுண்டீஸ்வரி குணாளன் மற்றும் சுகாதார ஆய்வாளர் சிவக்குமார் உடன் இருந்தனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.