மாவட்ட செய்திகள்
தஞ்சையில் மாணவர்கள் பிளஸ் 2 தேர்வு எழுதும் போது தலைக்கு மேலே மின்சாரம் ஒயர் தீப்பற்றி எரிந்ததால் அலறிய மாணவர்கள் தேர்வு மையத்தில் பெரும் பரபரப்பு.
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று தொடங்கியது தஞ்சை மாவட்டத்தில் 107 தேர்வு மையங்களில் 29 ஆயிரத்து 34 மாணவ மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர் தஞ்சை அரண்மனை வளாகத்தில் உள்ள அரசர் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் 392 மாணவ மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர்.
இன்று முதல் நாள் தேர்வு தொடங்கியது திடீரென மின்தடை ஏற்பட்டது மின் விளக்குகள் எரியவில்லை மின்விசிறிகள் இயங்கவில்லை இதனால் மாணவ மாணவிகள் அவதி அடைந்தனர் மின்தடையால் இது ஏற்பட்டிருக்கலாம் என மின் வாரியத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது அந்த பகுதியில் மின்தடை எதுவும் ஏற்படவில்லை என தெரிவித்தனர்.
ஆனால் மாடியில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்தில் 14 நம்பர் அறையில் மாணவர்கள் தேர்வு எழுத அமர்ந்திருந்த போது தலைக்கு மேலே மின் ஒயர் திடீரென தீப்பிடித்து எரிந்து மாணவர்கள் அலறி உள்ளனர் இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி உள்ளிட்டவர்களுக்கு தகவல் கிடைக்கவே உடனடியாக புதியதாக மின்சார உயர் வாங்கி வந்து சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டதோடு மற்றவர்கள் யாரும் அந்தப் பகுதிக்குச் செல்லாமல் தடுத்தனர் தேர்வு மையங்களில் மின்தடை ஏற்படாமல் அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும் என தமிழக அரசு கூறி இருந்த நிலையில் அதிகாரிகளின் அலட்சியத்தால் இந்த மின் தடையும் மாணவர்களின் அவதியும் ஏற்பட்டுள்ளது இனியாவது தேர்வு மையங்களில் ஜெனரேட்டர் வசதியை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என மாணவ மாணவிகள் கூறுகின்றனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.