மாவட்ட செய்திகள்
தஞ்சை மாவட்டத்தில் 107 மையங்களில் பிளஸ்-2 பொதுத் தேர்வை 29 ஆயிரத்து 34 மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர்.
தமிழகத்தில் பிளஸ் -2 பொதுத் தேர்வு இன்று தொடங்குகிறது. வருகிற 28-ந் தேதி வரை தேர்வு நடைபெறுகிறது.
தஞ்சை மாவட்டத்தில் பிளஸ் -2 பொதுத்தேர்வு 107 மையங்களில் நடக்கிறது. 225 பள்ளிகளை சேர்ந்த 13 ஆயிரத்து 235 மாணவர்களும், 15 ஆயிரத்து 195 மாணவிகளும். மேலும் 604 தனித்தேர்வர்களும் தேர்வு எழுதுகிறார்கள் இவர்களுக்காக மூன்று தனி தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
என மொத்தம் 29 ஆயிரத்து 34 மாணவ- மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர்.
இவர்களில் 162 மாற்றுத்திறனாளி மாணவர்களும் அடங்கும். தேர்வில் முறைகேடுகள் எதுவும் நடைபெறாமல் கண்காணிக்க 206 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
2 ஆயிரத்து 533 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.