மாவட்ட செய்திகள்
தேனி மாவட்டம் போடி கொட்டகுடி பகுதியில் போடப்பட்டுள்ள டோல்கேட் இணை அகற்றக் கோரி நாம் தமிழர் கட்சியின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்.

தேனி மாவட்டம் போடி கொட்டகுடி பகுதியில் போடப்பட்டுள்ள டோல்கேட் இணை அகற்றக் கோரி நாம் தமிழர் கட்சியின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது நாம் தமிழர் கட்சியின் சார்பாக போடி முந்தல் சோதனை சாவடியில் பேரூராட்சியின் நிர்வாகத்தால் போடப்பட்டுள்ள டோல்கேட்டினை அகற்ற கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தேனி பாராளுமன்ற பொறுப்பாளர் பிரேம் சந்தர் தலைமையில் நடைபெற்றது இதில் தேனி கிழக்கு மாவட்ட செயலாளர் ஜெயக்குமார் மற்றும் போடி சட்டமன்ற பொறுப்பாளர் ஜெயக்குமார் போடி நகர செயலாளர் சரவணன் தேனி மாவட்ட சுற்றுச்சூழல் பாசறை செயலாளர் சின்னமருது உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர் டோல்கேட் அகற்றப்படவில்லை என்றால் நீதிமன்றம் மூலம் வழக்கு தொடர்ந்து டோல் கேட்டினை அகற்றும் பணியை நாம் தமிழர் கட்சி செய்யும் என தெரிவித்தனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
