BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

வத்தலகுண்டு முதல் கொடைக்கானல் செல்லும் சாலையில் மூன்று இடங்களில் நெடுஞ்சாலைத் துறையால் புதிய பாலம் அமைக்கும் பணி.

வத்தலகுண்டு முதல் கொடைக்கானல் செல்லும் சாலையில் மூன்று இடங்களில் நெடுஞ்சாலைத் துறையால் புதிய பாலம் அமைக்கும் பணி நடைபெற்று தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. வரும் சில நாட்களில் கொடைக்கானலில் கோடைவிழா துவங்க உள்ள நிலையில் அதிகளவு சுற்றுலா பயணிகள் கொடைக்கானலை நோக்கி வருவது வழக்கம் இந்நிலையில் நெடுஞ்சாலைத்துறை தற்போது மூன்று இடங்களில் சாலைகளில் பாலம் அமைப்பதற்காக குழியைத் தோண்டி அப்படியே விட்டு விட்டதால் இரவு நேரங்களில் வரும் சுற்றுலா பயணிகளுக்கு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

மேலும் சாலை பணி நடைபெறுகிறது. இங்கு குழி தோண்டப்பட்டு உள்ளது என்று முன் எச்சரிக்கை பலகை வைக்கப்படவில்லை. அதிக அளவு சுற்றுலா பயணிகள் வாகனம் வரும் பொழுது கண்டிப்பாக விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

ஆகவே நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அலட்சியமாக செயல்படாமல் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களைப் பற்றி கவலைப்படாத நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )