மாவட்ட செய்திகள்
காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 20 டன் மரங்கள் வெட்டி கடத்தல்: மர்ம ஆசாமி சிக்காததன் மர்மம் என்ன ?

வேலூர் மாவட்டம், காட்பாடியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது இந்தப் பள்ளிக்கு வரும்போதெல்லாம் நீர்ப்பாசனத்துறை அமைச்சராக உள்ள துரைமுருகன் தனது அரை நூற்றாண்டு கால வாழ்க்கையில் சுமார் 200க்கும் மேற்பட்ட மரங்களை இந்தப் பள்ளியை சுற்றி சுற்றி நட்டு பசுமையாக்கி வைத்திருந்தார் .இந்தப் பள்ளியின் சுற்றுச்சுவரை சுற்றி மரங்கள் வளர்ந்திருந்தன.

இந்த மரங்களில் இருந்து கிடைக்கும் நிழலில் மாணவர்கள் அமர்ந்து மதிய உணவு சாப்பிடுவது மற்றும் இளைப்பாறுவது என்று பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் நிழல் தரும் இந்த மரங்களை காட்பாடியில் தன்னை அரசியலில் முக்கிய புள்ளி என்று சொல்லிக்கொண்டு திரியும் ஒரு கரும்புள்ளி இரவோடு இரவாக 150க்கும் மேற்பட்ட 20க்கும் மேற்பட்ட ஆண்டுகள் பழமை வாய்ந்த அந்த மரங்களை வெட்டி கடத்தி விற்பனை செய்து பணத்தை இல்லா கட்டியுள்ளார் என்று சொன்னால் அது மிகையாகாது. இது தலைமை ஆசிரியர் என்று பொறுப்பிலுள்ள அந்த நபருக்கு நன்றாகவே தெரியும் .

ஆனால் அரசியல்வாதியை காட்டிக் கொடுக்க மனமின்றி தனக்கு 150க்கும் மேற்பட்ட மரங்களை வெட்டி கடத்தியுள்ள அந்த நிழல் மனிதனைப் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று மீண்டும் மீண்டும் கிளிப்பிள்ளை போன்று சொல்லி வருகிறார் தலைமை ஆசிரியர் ஜோதீஸ்வர பிள்ளை.ஆனால் உண்மையில் விசாரிக்கும் வகையில் விசாரித்தா ல் இந்த உண்மை இவர் வாயில் இருந்து வெளிவரும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
