BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

சீர்காழியில் ரேஷன் பொருட்கள் தரமான முறையில் வழங்குவதற்க்கான ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுகாவில் தனி வட்டாட்சியர் குடிமை பொருள் வழங்கல் அலுவலர் சபிதா தேவி இன்று ரேஷன் பொருட்கள் விற்பனையாளர்களிடம் ஆய்வு கூட்டம் நடத்தினார்.

ஆய்வு கூட்டத்தில் மையக் கருத்து என்னவென்றால்,
கடந்த 04.05.2022 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வழங்கல் அலுவலர் கிருஷ்ணன் (DSO), SRM நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் மற்றும் DRPDS தலைமையில் ரேஷன் பொருட்கள் தரமான முறையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்குவது தொடர்பாக ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆய்வு கூட்டத்தை முன்னிறுத்தி சீர்காழி தாலுகாவில் உள்ள அனைத்து ரேஷன் பொருள் விற்பனையாளர்கள் கூட்டம் நடைபெற்றது.

ரேஷன் பொருட்கள் கடைக்கு வரும் பொழுதே தரமாக வந்துள்ளதா எடை சரியாக உள்ளதா என்று ஆராய்ந்த பின்னரே லாரியில் இருந்து இறக்க வேண்டும் என்று தனி வட்டாட்சியர் குடிமை பொருள் வழங்கல் அலுவலர் விற்பனையாளர்களுக்கு தெரிவித்தார்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )