மாவட்ட செய்திகள்
செம்பனார் கோவில் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் பச்ச பயறு கொள்முதல்.

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார் கோவில் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் மத்திய அரசின் குறைந்த பட்ச ஆதார விலை திட்டத்தின் மூலம் பச்ச பயறு கிலோ ரூ.72.75-க்கு தமிழக அரசு (NAFET) தேசிய வேளாண்மை கூட்டுறவு விற்பனை முகமை மூலம் கொள்முதல் செய்யபடுகிறது.

இதில் செம்பனார் கோவில் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் பதிவு செய்துள்ள விவசாயிகள் விளைபொருளான பச்ச பயறை விற்பனை கூடத்திற்கு எடுத்து வந்து பயன் அடையுமாறும் இது வரை பதிவு செய்யாத விவசாயிகள் தங்களது ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தக நகல், கணினி (கம்யூட்டர் ) சிட்டா, கிராம நிர்வாக அலுவலரிடம் பச்ச பயறு சாகுபடி செய்யப்பட்டதற்கான அடங்கல் ,மாதிரி பயறு ஆகியவற்றை எடுத்து வந்து ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் சரி பார்த்து பதிவு செய்திட அறிவிப்பு விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
