BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

ஸ்ரீவாராஹி அம்மனுக்கு மஹா சிறப்பு யாகம்!

காட்பாடி அடுத்த பிரம்மபுரம் ஸ்ரீ அங்காளம்மன் கோயில் வளாகத்தில் உள்ள ஸ்ரீவாராஹி தேவியம்மனுக்கு மஹா சிறப்பு யாகம் நடந்தது. வளர்பிறை பஞ்சமி திதியை முன்னிட்டு நேற்று காலை 9:00 மணியளவில் ஸ்ரீ வாராஹி தேவியம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாரதனை நடைபெற்றது. பின்னர் மாலை 6:00 மணியளவில் ஸ்ரீ வாராஹி தேவியம்மனுக்கான மஹா சிறப்பு யாகம் நடைபெற்றது. அனைத்து பக்தர்களும் திரளாக வந்து பூஜையில் கலந்து கொண்டு தங்கள் குழந்தைகளின் படிப்பிற்காகவும், தொழிலுக்காகவும் அம்மனை வேண்டி சென்றனர். மஹா சிறப்பு யாகம்
அகோரி குரு ஸ்ரீராம்ராஜ் தலைமையில் சிறப்பாக நடந்தது. பக்தர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து பூஜையில் கலந்து கொண்டனர். பூஜையில் கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதங்களை சரத்குமார் வழங்கினார்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )