BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

தஞ்சை அருகே விளார் ரோடு பகுதியில் நடந்து சென்ற முதியவர் மீது பைக் மோதியதில் அவர் பரிதாபமாக இறந்தார்.

தஞ்சை அருகே இருசக்கர வாகன விபத்தில் இளைஞர் உயிரிழப்பு | The youth was  killed when his speeding bike stalled and fell in the Mariamman temple area  near Thanjavur.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வடகரை வடகுடி பகுதியை சேர்ந்தவர் செல்வமணி (70/. இவர் கடந்த 5ம் தேதி தஞ்சாவூருக்கு வந்திருந்தார். பின்னர் விளார் ரோடு, சேவியர் நகர் பகுதியில் செல்வமணி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் மாரியம்மன் கோவில் அன்னை மீனாள் நகரை சேர்ந்த ராஜ்குமார் என்பவரின் மகன் ஆனந்த் (28) என்பவர் ஓட்டி வந்த பைக் செல்வமணி மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.

இதுகுறித்து செல்வமணியின் மகன் தேவேந்திரன் தஞ்சை தாலுகா போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் இன்ஸ்பெக்டர் ஜெகதீஸ்வரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )