BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

பழனி பேருந்து நிலையத்தில் விதியை மீறி அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்களை வட்டாரப் போக்குவரத்து துறை அதிகாரிகள் ஆய்வு செய்து.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இருந்து உள்ளூர் கிராமங்கள், தமிழகம் மட்டுமின்றி அனைத்து ஊர்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகிறது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அதன் காரணமாக அந்தப் பேருந்து நிலையத்தில் நாள்தோறும் 500க்கும் மேற்பட்ட பேருந்துகள் வந்து செல்வது வாடிக்கை. அது உள்ளூர் பயணிகள் வெளியூர் பயணிகள் என அனைவருக்கும் உதவும் வகையில் இருப்பதால் தினமும் ஏராளமான பயணிகள் பேருந்திற்காக வந்து செல்வர்.

இந்தநிலையில் பழனியில் இயங்கும் பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பும் ஹாரன்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள், கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் பயணிகள் என அனைவரும் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்த வண்ணம் இருந்துள்ளது.

அடிக்கடி இவ்வாறு புகார் வருவது தொடர்கதையாக இருந்து வந்ததால் பழனி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் ஈஸ்வரன் மற்றும் ஒட்டன்சத்திரம் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் ஸ்ரீதரன் ஆகியோர் தலைமையிலான அதிகாரிகள் பழனி பேருந்து நிலையத்தில் உள்ள பேருந்துகளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பெரும்பாலான தனியார் பேருந்துகள் அனைத்திலும் அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்கள் பொருத்தப்பட்டுள்ளது தெரியவந்தது.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் தொடர்ந்து பேருந்துகளில் பொருத்தப்பட்டிருந்த ஹாரன்களை அகற்றினர். பழனி பேருந்து நிலையத்திற்கு வரும் சில பேருந்துகள் மட்டும் ஆய்வு செய்யப்பட்டு ஹாரன்கள் அகற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்கள் வாகனங்களில் பொருத்துவது சட்டப்படி குற்றம் என்றும் சட்ட விதிமீறல் என்றும் தெரிந்தும் அதனை வேண்டுமென்றே பொருத்துகின்றனர். பேருந்துகளில் மட்டும் ஆய்வு செய்து ஒலிப்பான்களை அகற்றினால் மட்டும் போதாது. ஆகவே ஒருநாள் முழுவதும் அதிகாரிகள் பழனி வரும் அனைத்து பேருந்துகளிலும் ஆய்வு மேற்கொண்டு அதிக ஒலி எழுப்பும் ஹாரன்கள் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )