BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

குண்டாஸ் போட சொல்லி திருப்பத்தூர் நகர காவல் நிலையம் முன்பு மது போதையில் இளைஞர் ரகளை.

 

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த பொன்னியம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் பெருமாள் (19). இவர் திடீரென திருப்பத்தூர் காவல் நிலையத்திற்கு வந்து மது போதையில் வந்து தன் மீது குண்டாஸ் போட சொல்லியும் தன்னை அடிக்க சொல்லியும் போலீசாரிடம் ரகளை செய்தார்.

மேலும், தனது கை கால்களை உடைத்தும் குண்டாஸ் போட்டும் உடனடியாக தன்னை வேலூர் சிறையில் அடைக்க வேண்டும் எனவும் ரகளையில் ஈடுபட்டார். இதன் காரணமாக போலீசார் செய்வது அறியாமல் திணறினர்.

பின்னர் பெருமாளின் உறவினரை வரவழைத்து நீண்ட போராட்டத்திற்குப் பிறகு ஆட்டோவில் ஏற்றி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இதன் காரணமாக திருப்பத்தூர் காவல் நிலையத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

வடிவேலு பட பாணியில் வான்டடாக காவல் நிலையத்துக்கு வந்து தன்னை கைது செய்யக்கோரி அதுவும் குண்டாஸ் சட்டத்தில் கைது செய்யக்கோரி மதுபோதை ஆசாமி ரகளையில் ஈடுபட்ட சம்பவம் வேடிக்கையாக உள்ளது.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )