BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

‘ஸ்லோ’ அதிமுக… ஸ்பீடு ‘திமுக.,முந்தைய அதிமுக ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் போடப்பட்டு செயல்பாட்டுக்கு வந்ததும், வராதததும் உண்டு.

முந்தைய அதிமுக ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் போடப்பட்டு செயல்பாட்டுக்கு வந்ததும், வராதததும் உண்டு.

தற்போதைய திமுக ஆட்சியில் முதல்வர் ஸ்டாலினின் அதிரடி செயல் பாடுகள் உட்கட்சியினரிடையே அதிர்ச்சியை கொடுத்து வந்தாலும், சில புத்திசாலி தலைவர்கள் தங்களை தக்க வைத்துக் கொள்ள மக்கள் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

அந்த வகையில் கோவை மாவட்டம் பெரிய நாயக்கன் பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட எண் 24 வீரபாண்டி ஊராட்சி தலைவர் பழனிசாமி(திமுக) மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளார்.

இந்த ஊராட்சிக்கு உட்பட்ட மேற்கு மலை தொடர்ச்சியில் கேரள எல்லையில் அமைந்துள்ள, ஆனைகட்டி அருகே உள்ள பன பள்ளி கிராமம்.

சுமார் 98 குடும்பங்களை சார்ந்த 400 க்கும் மேற்பட்டோர் வசிக்கும் மலை கிராமம் இது.

கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இந்த ஊரில், கடந்த அதிமுக ஆட்சியில் பல திட்டங்கள் ஆமை வேகத்தில் நடைபெற்று வந்துள்ளது.

சோலார் விளக்குகள், பள்ளிக்கூடங்கள், தடையில்லா தண்ணீர் வசதி, என வசதிகள் இருந்தும் அனைத்து மக்களும் ஓடு மற்றும் கூரை வீடுகளிலேயே வசிந்து வந்தோம்.
தற்போதைய திமுக ஆட்சிக்கு வந்த உடன் முதற்கட்டமாக 19 வீடுகள் காங்கிரீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

சுமார் 5 கிலோ மீட்டர் கடந்து வனப்பகுதியில் இந்த ஊர் அமைந்துள்ளதால் யானை தொல்லைகளும் உண்டு. மேலும் ஒரு சிறிய மருத்துவமனை மட்டும் வந்தால் நன்றாக இருக்கும். காலை 7 மணி முதல் பத்து மணி வரை மட்டும் மருத்துவமனை செயல் பட்டாலே போதும் என்று குடியிருப்பு வாசி கனகராஜ் கூறினார்.

இது பற்றி ஊராட்சி தலைவர் பழனிசாமி நம்மிடம் பேசும் போது, சென்ற அதிமுக ஆட்சியிலேயே பல முறை இந்த வீடு கட்டும் திட்டத்திற்கு மனு கொடுத்தோம்.

ஆனால் எதுவும் நடந்த பாடில்லை. தற்போதைய திமுக ஆட்சிக்கு வந்த உடன் முதற்கட்டமாக 19 வீடுகளை கட்டி முடித்து கொடுத்துள்ளோம். இந்த ஆண்டு இறுதிக்குள் அனைவருக்கும் இந்த பாதுகாப்பான காங்கிரீட் வீடுகள் கட்டி கொடுக்கப்படும்.

மேலும் மக்கள் தொகை குறைவாக இருப்பதால் முதல்வரின் உத்தரவின் பேரில் வீடு தேடி மருத்துவ வசதியை செய்து கொடுத்துள்ளோம் என்றார்.

எது எப்படியோ முதல்வரின் விவேகம், திமுக தலைவர் களுக்கு வேகம் கொடுத்துள்ளது என்றே சொல்லலாம்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )