BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

சேற்று குளியல் குளத்தில் உற்சாக குளியல் போட்ட திருவானைக்கோவில் யானை அகிலா.

சேற்று குளியல் குளத்தில் உற்சாக குளியல் போட்ட திருவானைக்கோவில் யானை அகிலா

திருச்சி திருவனைகோயில் அருள்மிகு ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயிலில் இறை பணியாற்றி வரும் யானை அகிலாவிற்கு ஏற்கனவே குளிப்பதற்காக நீச்சல்குளம் கட்டப்பட்டு உள்ளது.

இந்நிலையில் வனத்துறை மற்றும் கால்நடை மருத்துவர்களின் ஆலோசனைப் படியும் இந்து சமய அறநிலைத்துறை அறிவுறுத்தலின்படி கோயில் உள்ள நாச்சியார் தோப்பில் ஏற்கனவே இருந்து வரும் நீச்சல் குளம் அருகில் யானை அகிலா சேற்றில் குளிப்பதற்காக புதியதாக 1200 சதுரடியில்
ரூ50,000 மதிப்பில் களிமண், செம்மண் , மணல் ஆகியவைகள் சுமார் ஒன்றரை அடி உயரம் கொட்டப்பட்டு
சேற்றுக் குளியல் குளம் அமைக்கப்பட்டுள்ளது உள்ளது.

இதில் உப்பும் சேர்க்கப்பட்டுள்ளது ,இன்று அந்த களிமண்ணில் நீர் நிரப்பப்பட்டது அதனைத் தொடர்ந்து யானை அகிலா அந்த சேற்று குளத்திற்குள் இறங்கி துதிக்கையால் அடித்து விளையாண்டு சேற்றை அள்ளி தன்மீது போட்டுக்கொண்டது. எப்பொழுதும் யானைக்கு தண்ணீரைக் கண்டால் மகிழ்ச்சி தான் அதுவும் சேற்று தண்ணீர் என்றால் கூடுதல் மகிழ்வுடன் உற்சாக குளியல் போடுகிறது.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )