மாவட்ட செய்திகள்
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா பொறையாறு அருகே வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகைகள், இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற மர்ம நபர்கள்.

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா பொறையாறு அருகே வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகைகள், இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.பொறையார் அருகே உள்ள எடுத்துக்கட்டி சாத்தனூர் ஊராட்சி பூதனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சம்சூர்ஹூதா (55), இவரது மகன்கள் வெளிநாடுகளில் பணியாற்றி வருகின்றனர். இவர் தனது உறவினர் வீட்டின் துக்க நிகழ்ச்சிக்கு சனிக்கிழமை சென்றிருந்தார். இந்நிலையில், அவரது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை ஞாயிற்றுக்கிழமை பார்த்த பக்கத்து வீட்டினர் சம்சூர்ஹூதா தெரிவித்துள்ளனர். அவர் உடனடியாக வீட்டுக்கு வந்து பார்த்தபோது, பீரோவிலிருந்த 5 பவுன் நகைகள், விலை உயர்ந்த வெளிநாட்டுப் பொருட்கள், இருசக்கர வாகனம் ஆகியவை திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து, அவரது உறவினர் முகமது ஹூயிஸ் பொறையாறு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், சீர்காழி காவல் துணைக் கண்காணிப்பாளர் லாமேக், பொறையாறு காவல் ஆய்வாளர் சிங்காரவேலன், உதவி ஆய்வாளர் மகாலட்சுமி ஆகியோர் அங்குவந்து பார்வையிட்டனர்.
பின்னர், பொறையாறு போலீஸார் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
