மாவட்ட செய்திகள்
திருவெறும்பூர் அருகே போலீஸ் காலனியில் உள்ள ஞான விநாயகர் ஆலயத்தின் பூச்சொரிதல் விழா.

திருவெறும்பூர் அருகே போலீஸ் காலனியில் உள்ள ஞான விநாயகர் ஆலயத்தின் பூச்சொரிதல் விழா ஞான விநாயகர் வழிபாட்டு நலச்சங்கம் சார்பில் கோலாகலமாக நடைபெற்றது.

திருவெறும்பூர் அருகே போலீஸ் காலனியில் உள்ள ஞான விநாயகர் வழிபாட்டு நலச்சங்கம் சார்பில் ஞான விநாயகர் ஆலயத்தில் உள்ள பரிவார தெய்வங்களான ஆதி மாரியம்மன், மாரியம்மன், துர்க்கை அம்மன் ஆகிய தெய்வங்களுக்கு பொதுமக்கள் பூத்தட்டு எடுத்து பிரதான வீதி வழியாக வானவேடிக்கை மற்றும் மேளதாளங்களுடன் வீதி உலா வந்து அம்மனுக்கு பூச்சொரிதல் விழா நடத்தினார்கள்.



இந்த விழாவில் போலீஸ்காலனி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்களும் பக்தர்களும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதன் தொடர்ச்சியாக அனைத்து பொது மக்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
